Header Ads



"நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம், தந்திரங்களை பயன்படுத்துகிறது"

1977 ஆம் ஆண்டு இளைஞர்களாக இருந்த பாட்டி, தாத்தாக்கள் பேரணி செல்லும் போது பாதுகாப்பு வழங்கும் பொலிஸார், உண்மையான இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும் போது அவர்களின் மண்டைகளை உடைப்பதாக இலங்கை மனிதஉ உரிமைகளுக்கான கேந்திர நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொழும்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

கல்வித்துறை எதிர்பார்த்த எந்த மறுசீரமைப்பையும் மேற்கொள்ள தவறியுள்ள அரசாங்கம் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டங்களை சீர்குலைத்து வருகிறது.

உண்மையான இளைஞர்களுக்கு தாக்குதல் நடத்தும் அதேவேளை 77 ஆம் ஆண்டு இளைஞர்களாக இருந்த பாட்டி, தாத்தாக்கள் அழைத்து கொண்டு வீதிகளை மூடி பேரணி செல்கின்றனர்.

பல்கலைக்கழகத்துறையிலும் கல்வித்துறையிலும் பாரதூரமான பல நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இந்த நெருக்கடிகளை மூடிமறைக்க அரசாங்கம் பல தந்திரங்களை பயன்படுத்தி வருகிறது.

தேர்தலுக்கு முன்னர், வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இளைஞர்களும், மாணவர்களும் போராட்டம் நடத்தும் நிலைமை உருவாகியுள்ளது. போராட்டம் நடத்தும் நிலைமை அதிகரித்ததும் அரசாங்கம் அடக்குமுறை மூலம் அதற்கு பதிலளித்து வருகிறது.

கொழும்பில் நேற்று இரண்டு பேரணிகள் நடைபெற்றன. இதில் ஒரு பேரணி ஐக்கிய தேசியக் கட்சியினால் நடத்தப்பட்ட பேரணி, இதற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன் வளங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தன.

இலங்கையின் வரலாற்றில் முதல் முறையாக ஆட்சி செய்ய இடமளிக்குமாறும் இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பை வழங்க இடமளிக்குமாறுத் கோரி பேரணி நடத்தப்பட்டது.

இது இளைஞர்கள் மற்றும் பெண்களின் கோரிக்கை என கோஷங்கள் எழுப்பட்டன. ஐக்கி்ய தேசியக் கட்சியின் இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களில் பலர் 1977 ஆம் ஆண்டு இளைஞர்களாக இருந்தவர்கள்.

கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படாது தொழில் வாய்ப்புகள் உருவாகாது என்பதை தற்போதைய இளைஞர்கள் தெளிவாக உணர்ந்துள்ளனர்.

பாதிப்புகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களின் ஆர்ப்பாட்டங்கள் கண்ணீர் புகை தாக்குதல் மற்றும் லத்தி தாக்குதல் நடத்தி கலைக்கப்படுகின்றன. பிரச்சினைகளை தேடிப்பார்த்து தீர்வுகளை வழங்குவதில்லை.

ஏனைய துறைகளின் பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வரும் எவரும் உயர்கல்வியில் நிலவும் பிரச்சினைகளை பேசி தீர்க்க முன்வருவதில்லை.

இவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குடிமக்களின் உரிமை எனவும் கீர்த்தி தென்னகோன் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.