Header Ads



இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, பலமடங்கு அதிகரிப்பு

'இலங்கையின் சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில், முகப்புத்தகத்தின் (பேஸ்புக்) பாவனை, பன்மடங்கு அதிகரித்துள்ளதாகவும்' மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு பேராசியர் லோஷந்தக ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். 

இந்த முகப்புத்தகத்தின் பாவனை, இலங்கையில் 92.63ஆக காணப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துரைத்த பேராசிரியர் கூறியதாவது, 

'கடந்த வருடத்தில் இலங்கையின் சனத்தொகை 20.36 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், இலங்கையில் அலைபேசி பாவனையாளர்களின் தொகை 27.40 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 

இது 135 சதவீதமாகக் காணப்படுகின்றது. இந்நாட்டில், இணையத்தளப் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை 4.79 (24 சதவீதம்) மில்லியனாகும். 

சமூக வலையமைப்புக்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2.80 மில்லியன் (14 சதவீதம்) ஆகும். 

எவ்வாறாயினும், சமூக வலைத்தளப் பாவனையாளர்களில், முகப்புத்தகப் பாவனையாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. 

டுவிட்ட பாவனை 2.89 சதவீதமாகவும் கூகுள் பிளஸ் பாவனை 0.74 சதவீதமாகவும் மாத்திரமே காணப்படுகின்றது. 

இலங்கையுன் ஒப்பிடுமிடத்து, சர்வதேசத்தின் நிலைமை இதைவிட மாறுபட்டதாகவே காணப்படுகின்றது. 

புதிய விவரங்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் ஜனவரி மாதமளவில் உலக சனத்தொகை 7.4 பில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 3.419 பில்லியன் பொதுமக்கள், இணையத்தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது' என அவர் மேலும் கூறினார். 

No comments

Powered by Blogger.