Header Ads



இலங்கை கிரிக்கெட்டிலிருந்து முஸ்லிம்கள் ஒதுங்குகிறார்களா..? ஒதுக்கப்படுகிறார்களா..??


வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று தமிழ் வீரர்கள் உட்பட அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணி மலேஷியாவுக்கான பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இவர்களுக்கான வழியனுப்புதல் நிகழ்வு இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையில் இலங்கை கிரிக்கெட் சபையில் இடம்பெற்றது.

அனைத்து மாவட்ட வீரர்களையும் உள்ளடக்கிய இளையோர் இலங்கை அணியில் பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மாணவன் கோபிநாத்தும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவனான ரிஷாந்த் ரியூட்டரும் மட்டக்களப்பு மெதடிஸ்ட் கல்லூரி மாணவனான  ஜெயசூரியன் சஞ்சீவனும் இணைக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களான சஜித் இந்திரரத்ன, ரமேஷ் நிமந்த, பந்துல உடுபிஹில ( அணித் தலைவர் ), உதித் மதுவன்த, டில்ஷான் சந்துருவன், சனுக்க, நிபுன் சதுரங்க, சண்டீப் நிஸன்சல, கஜித் கொட்டுவெகொட, நிவன்த கவிஷ்வர,  இலங்கசிங்க, அத்தநாயக்க, அவிஷ்க பெர்னாண்டோ,  சனோஜ் செனவிரத்ன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த காலங்களில் இலங்கை தேசிய அணியில் சில முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். இளவயது அணியிலும் சில முஸ்லிம்கள் இடம்பெற்றனர். பிரபல பாடசாலை அணிகளிலும் தற்போதும் முஸ்லிம் மாணவர்கள் ஆடிவருகின்றனர். எனினும் அண்மைய காலங்களில் இலங்கை தேசிய அணிகளில் முஸ்லிம்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் முஸ்லிம்கள் கிரிக்கெட்டிலிருந்து ஒதுங்குகிறார்களா அல்லது ஓரங்கட்டப்படுகிறார்களா என்ற கேள்வி எழுகிறது.


4 comments:

  1. திலங்க சுமதிபால மிகப் பெரும் இனவாதி. அதிலும் கிழக்கு மாகாணம் என்றாலே ஜிகாத் இயக்கங்களின் உறைவிடம் என்ற குறுகிய கருத்தைக் கொண்ட கிறுக்கன். அவனுடன் தனிப்பட்ட ரீதியில் நட்பைக் கொண்டிருந்த வகையில் அவனது இனவாத சிந்தனைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அவன் கிரிக்கட் தலைவராக இருக்கும் வரை முஸ்லிம்கள் விடயத்தில் இன ஒதுக்கல் கொள்கையையே கடைப்பிடிப்பான். இப்படியான இனவாதிகளுக்கு கொழும்பில் மட்டுமன்றி நாடு முழுவதும் இருக்கும் எமது முஸ்லிம்களில் சிலரும் ஆதரவாளர்காளாக இருப்பதுதான் கொடுமை.

    ReplyDelete
  2. சுமதிபால எனும் துவேசகாரன் இருக்கும் வரை சிறுபான்மையினருக்கு அணிக்குள் வாய்ப்பில்லை. தமிழ் வீரர்கள் தெரிவு செய்யப்பட்டதும். தமிழர்களுக்கான உரிமைகள் பகிரபடுகின்றது என்பதை உலகிற்கு காட்ட ஒரு அரசியல் விளையாட்டாக கூட இருக்கலாம்.

    ReplyDelete
  3. Aduththa.kattaththil.muslimkalaiyun.serththukolluvarkal.kavailaipsdavendem.

    ReplyDelete
  4. ஆம் மட்டகளப்பு மாவட்டத்தில் மட்டகளப்பு மாவட்ட கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்ட போட்டியில் வெரும் 110 ball 200 run எடுத்து முதல் மற்றும் கடைசி வீரர் ஏறாவூரை சேர்ந்த பெண் சந்தை வீதியில் வசிக்கும் றசாக் முகமட் அறபாத்.இவர் சின்ன சச்சின் என செல்லமாக அழைக்கப்படும் வீரர்.இச் சாதனை 2015 DECEMBER நிகழ்தினார் என்பது குறிப்பட தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.