Header Ads



பிரித்தானியா வீதிகளில்தான் அடுத்த தாக்குதல் - ஐ.எஸ். தீவிரவாதிகள் எச்சரிக்கை


பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் அடுத்த தாக்குதல் பிரித்தானியா வீதிகளில் தான் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததில் 32 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாதிகள் பொறுப்பெற்றுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் கணக்கில் இருந்து எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதில், இஸ்லாமிக் ஸ்டேட்டுக்கு எதிராக கூட்டணி அமைத்துள்ள நாடுகள் அனைத்து தங்களின் இருண்ட பக்கத்தை பார்ப்பார்கள் என்று நாங்கள் உறுதி கூறுகிறோம்.

மேலும் உங்களுக்கு காத்திருப்பது அல்லாவின் கிருபையில் இன்னும் பலமானதாகவும் கசப்பானதாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரித்தானியாவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. லண்டன் நகரில் உள்ள வீதிகளில் ஆயுதம் ஏந்திய பொலிசார் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

லண்டனில் உள்ள முக்கிய கட்டிடங்கள் மற்றும் வீதிகளில் அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.