Header Ads



"தலைவர் கணைகளைத் தொடுத்துவிட்டார், எனக்கு பெரும் வேதனையாக உள்ளது"

(அப்துல் கையும்)

கெளரவமான முறையில் அரசியிலில் இருந்து ஓய்வுபெறத் தயாராக இருந்தேன். ஆனால், பலவந்தமாக கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவது போல் கட்சித் தலைவர் விமர்சனக் கணைகளைத் தொடுத்துவிட்டார். உட்கட்சிப்பூசலை முச்சந்திக்குக் கொண்டு வந்துவிட்டார். கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் இது எனக்கு பெரும் வேதனையாக உள்ளது' இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பொதுச்செயலாளருமாகிய எம். ரி. ஹசனலி தெரிவித்தார்.

கட்சியின் தலைமைப் பீடத்துக்கு எதிராக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சதித்திட்டம் தீட்டவில்லை. ஆரம்பம் முதல் இன்றுவரை கட்சியின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைத்த போராளி நான். நானாக தேசியப் பட்டியல் கேட்கவில்லை. இவர்கள்தான் எனது பெயரை பரிந்துரை செய்தனர். பெயர் பிரேரிக்கப்பட்டதால்தான் நான் அதைக் கேட்டேன். கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் என்ற வகையில் அதை கேட்பதற்குரிய உரிமையும் எனக்கிருக்கின்றது. கட்சியில் இருப்பவர்கள் எதிரிகள் இல்லை. நாம் எல்லாம் ஒரு குடும்பம். அதற்குள் ஏற்பட்ட பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்திருக்கலாம். தலைவர்தான் இதை சந்திக்குக் கொண்டு வந்துவிட்டார்.

அதுவும் தேசிய மாநாட்டில் எல்லோருக்கும் மத்தியில் காரசாரமாக விமர்சித்து விட்டார். இதுதான் எனக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் இருந்து ஓய்வுபெறும் காலம் வந்துவிட்டதால், மிகவும் கெளரவமான முறையில் ஓய்வுபெற உத்தேசித்தேன். மூத்த உறுப்பினரை கெளரவமாக வழியனுப்ப வேண்டிய கடப்பாடு தலைவருக்கும் இருக்கின்றது. ஆனால் கழுத்தைப் பிடித்து இழுத்து வெளியே போடுவதுபோல் விமர்சித்து விட்டார் என்றார் ஹசனலி. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் உரையாற்றிய கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம், மு.காவின் செயலாளர் நாயகம் ஹசனலியையும், தவிசாளார் பஷீர் சேகுதாவூத்தையும் கடுமையாக தாக்கிப்பேசியிருந்தார். கட்சியின் தலைமைப்பீடத்துக்கு எதிராக இவர்கள் இருவரும் திட்டம் வகுத்தனர் என்றும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இது பற்றி ஹசனலி மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டார்.

6 comments:

  1. எவ்வளவு வயது போனாலும் கோள் கேட்பதால் வரும் நிலைதான் இது!

    ReplyDelete
  2. Dear hasana Ali Saar,
    ok, we agreed your complaint but who started this rubbish in public........?
    As you said we have to solve the family problem internally then why u sir avoid the events in Palamunai that mean you only publizied yourself this internal problems by avoiding this events....! Am I correct..?

    ReplyDelete
  3. தலைவர்
    மறைந்த தலைவரின் கால் தூசுக்குக்கூட சமனாகாத தலைபமத்துவத்திடமிருந்து கண்ணியமான உங்களுக்கே இந்த நிலை என்றால்
    எங்களின் நிலை .
    ஆரம்ப காலப் போராழிகள் மனம் நொந்து எவ்வாறான மன நிலையில் இவ்வளவு காலம் இருந்திருப்பார்கள் என்பது உங்களுக்கு இப்போது விளங்கும்.
    சமூக நலனுக்காக உருவாக்கப்பட்ட கட்சி நெறி பிரண்டு பிழையான பாதையில் பயணிக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும் .
    பல்லாயிரக்கணக்கான போராழிகள் அதிருப்தியாய் உள்ளவர்களுக்கு நீங்கள் ஆறுதல் கூறி வல்ல அல்லாஹ்விடம் எல்லாவற்றையும் விட்டு விடுங்கள்

    ReplyDelete
  4. ஹசனலி அவர்களே, உங்களது பிரச்சினை தான் என்ன? தலைமைத்துவத்தின் செயற்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தான் நீங்கள் மாகாநாட்டை புறக்கணித்து உங்கள் எதிர்ப்பை வெளிகாட்டினீர்கல். இப்போது தலைமைத்துவத்தின் பக்கத்தில் இருந்து சில எதிர் கருத்துக்களும் ஒழுங்கு நடவெடிக்கைகளும் வந்தால் அதை எதிர் கொள்ளாமல் கவலை என்றும் ஒய்வு என்றும் நொந்து போய் கதைகிறீர்கள். இது தானா ஒரு மூத்த போராளியின் நெஞ்சுரமும், உரிமைபோரட்ட குணமும். தலைமை பயமுறுத்தினால் நீங்கள் பயந்து அறிக்கை விடுவீர்களா என்ன? எங்களுக்கு உங்களதும் உங்களது தலைமையினதும் கூத்து புதினத்தையும் விசனத்தையும் தருகிறது. பாவம் முஸ்லிம் மக்கள்.

    ReplyDelete
  5. ஹசனலி அவர்களே, உங்களது பிரச்சினை தான் என்ன? தலைமைத்துவத்தின் செயற்பாடுகளில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்று தான் நீங்கள் மாகாநாட்டை புறக்கணித்து உங்கள் எதிர்ப்பை வெளிகாட்டினீர்கல். இப்போது தலைமைத்துவத்தின் பக்கத்தில் இருந்து சில எதிர் கருத்துக்களும் ஒழுங்கு நடவெடிக்கைகளும் வந்தால் அதை எதிர் கொள்ளாமல் கவலை என்றும் ஒய்வு என்றும் நொந்து போய் கதைகிறீர்கள். இது தானா ஒரு மூத்த போராளியின் நெஞ்சுரமும், உரிமைபோரட்ட குணமும். தலைமை பயமுறுத்தினால் நீங்கள் பயந்து அறிக்கை விடுவீர்களா என்ன? எங்களுக்கு உங்களதும் உங்களது தலைமையினதும் கூத்து புதினத்தையும் விசனத்தையும் தருகிறது. பாவம் முஸ்லிம் மக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.