Header Ads



மகிந்தவினால் வெடித்த யானைக் கல், வரட்சிக்கும் அவரே காரணமாம் - இராஜாங்க அமைச்சர் புலம்பல்

'மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்துக்குச் சென்றதைப் பொறுத்துக்கொள்ளாது, குருநாகலில் உள்ள யானைக்கல்லும் வெடித்து விட்டது' என்று இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அங்கு தொடர்ந்து உரையாற்றிய  அவர், 

'நாட்டையும் பொருளாதாரத்தையும்  சீர்குலைத்த மஹிந்த ராஜபக்ஷவை மக்கள் வெறுத்துவிட்டனர். எனினும், அவர் குருநாகலுக்குச் சென்றார். அதனைப் பொறுத்துக் கொள்ளாது, அங்குள்ள யானைக்கல்லும் வெடித்துவிட்டது. 

எனினும், கடந்த 17ஆம் திகதி ஹைட்பார்க்கில் நின்றுகொண்டு, நாட்டைத்தா, நாட்டைத்தா என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு மன்றாடினார். அதனை பொறுத்துக் கொள்ளாது மற்றைய கல்லும் வெடித்து விட்டது' என்றார். 

இதன்போது அவையில் அருந்த இணைந்த எதிரணியினர், '17க்கு அச்சமடைந்து விட்டீர்களா? அச்சமடைந்துவிட்டீர்களா?' என்று கோஷமிட்டனர். 

இதற்குப் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் 'ஆம், ஆம், அன்று மது அருந்திவிட்டு வீதிகளில் புரண்டு புரண்டு ஆட்கள் சென்றதை நாம் கண்டோம். அதன் சாபக்கேடே, நாட்டில் தற்போது வரட்சி நிலவுகின்றது' என்றார்.

No comments

Powered by Blogger.