Header Ads



அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்த, நிரந்தர அனுமதிப்பத்திரம்


அதிவேக வீதியில் வாகனத்தை செலுத்துவதற்காக தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக நிரந்தர அனுமதிப்பத்திரம் பெற்றுக்கெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த நிரந்தர அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் தொடக்கம் விநியோகிக்கப்படவுள்ள நிரந்தர அனுமதிப்பத்திரங்கள் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த ஐந்து ஆண்டுகளுக்குள் அனுமதிப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளும் உரிமையாளர் குறித்து எவ்வித முறைப்பாடுகளோ அல்லது குற்றச்சாட்டுக்களோ காணப்படாவிடின் வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்திற்கான கால எல்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு நீடிக்கப்படும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக போக்குவரத்து அனுமதிப்பத்திரம் 2 வாரங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்க வேண்டியுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ,பி.ஹேமச்சந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.