Header Ads



பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கி­டையில் கிரிக்கெட் - மாணவர்களை பீடிக்கும் பியர், கண்டுகொள்ளாத பெற்றோர்

பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கி­டையில் நடை­பெறும் மாபெரும் கிரிக்.ெகட் போட்­டி­யின்­போது ('பிக் மெட்ச்') ஆயி­ரக்­க­ணக்­கான பாட­சாலை மாண­வர்கள் பியர் பாவ­னைக்கு உட்­ப­டு­வ­தாக ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ள­தாக டாக்டர் அசங்க விஜே­ரத்ன தெரி­வித்தார்.

பிர­பல பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­­லான மாபெரும் கிரிக்கெட் போட்டி (பிக் மெட்ச்) மார்ச் ­மாதம் நடை­பெ­று­கி­றது. எனவே, குறித்த காலப்­ப­கு­தியில் பாட­சாலை மாணவக் குழுக்­க­ளுக்­கி­டையில் மோதல் இடம்­பெ­று­வதும் குறிப்­பி­டத்­தக்­கது. அத்­துடன், குறித்த கிரிக்கெட் போட்­டியின் போது கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சாலை மாண­வர்கள் மகளிர் கல்­லூரி ஒன்­றிற்குள் அத்­து­மீறி நுழைய முற்­பட்­ட­போது கடந்த மூன்றாம் திகதி பொலி­ஸா­ரினால் கைது செய்­ய­பட்­ட­மையும் குறிப்­பிடத்­தக்­கது.

மாண­வர்கள் ஏனைய மது­பானம் உட்­கொள்­வதை பெற்றோர் அங்­கீ­க­ரிக்­காத போதும் பியர் பாவ­னை­யினை கண்­டு­கொள்­வ­தில்லை. எனினும், பியர் பாவ­னையே ஏனைய மதுப்­ப­ழக்­கங்­க­ளுக்கு அடித்­தளம் என்­பதை பெற்­றோர்கள் உணர்ந்து மாண­வர்­களின் இந்நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் டாக்டர் அசங்க விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.