லஞ்சம் வாங்குவதோ, கொடுப்பதோ இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பெரும்பாவம்...!!
-ARM INAS-
ராவய பத்திரிகையின் முன்னால் ஆசிரியர் விக்டர் ஜவன் நம் நாட்டின் போக்குவரத்து சட்டம் தொடர்பில் நமது கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆக்கம் ஒன்றை எழுதியிருந்தார் அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்
"நாட்டில்
நடைபெறும் சில அசிங்கமான, குழப்பமான விடயங்களை புரிந்து கொள்ள
அண்மையில் எனக்கு கிடைத்த இந்த செய்தி உதவியாக இருக்கும் என
நினைக்கிறேன்.
பிரபல
பாடசாலை ஒன்றின் அதிபரின் சொத்துக்கள் தொடர்பான அறிக்கை தொடர்பில்
அறிய ஆர்வம் கொண்ட நபர் ஒருவர் அது தொடர்பில் கல்வி அமைச்சிடம்
எழுத்து மூலம் கோரிக்கை விடுத்த போதும் அதனை அவரால் பெற்றுக்கொள்ள
முடியவில்லை. இதனால்
இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருடன் நேரடியாக கதைத்து
இவ்வறிக்கையை பெற்றுக் கொள்ளும் நோக்கில் இந்நபர் தனது இரு நண்பர்களுடன்
வான்வண்டியொன்றில் கொழும்புக்கு வந்துள்ளார்.
கடை
ஒன்றில் தேநீர் பருக தனது வாகனத்தை இவர் தவறான இடம் ஒன்றில்
நிறுத்தியதால் பொலிஸாரால் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம்
விதிக்கும் சிட்டை பொலிஸார் இவரிடம் கொடுக்கும் போது தான்
கொழும்புக்கு வெளியில் வசிக்கும் ஒருவர் எனவும் இன்றே அபராதத்தை
செலுத்தி என்னுடைய அனுமதிப்பத்திரத்தை தான் பெற வேண்டும் எனவும்
பொலிஸாருக்கு தெரிவித்தார்.
இதனைக்
கேட்ட பொலிஸார் அபராத பணத்தை தபால் நிலையமொன்றில் செலுத்திவிட்டு 4
மணிக்கு முன்னர் மகரகம பொலிஸூக்கு வரும்படி சொல்லியிருந்தனர்.
குறிப்பிட்ட
நபருக்கு கல்வி அமைச்சின் செயலாளரை சந்திப்பதற்கான வாய்ப்பு கிட்டாத
போதும் அவருக்கு பதிலாக நியமிக்கப்பட்டிருந்த அதிகாரி குறிப்பிட்ட
அதிபரின் சொத்து விபர அறிக்கையை இவருக்கு வழங்குவதற்கு மறுத்துவிட்டார்.
நீண்ட
தூரம் பயணித்து கொழும்புக்கு வந்ததற்கான நோக்கத்தை இவரால் நிறைவேற்றிக்
கொள்ள முடியாமல் போனது. மீண்டும் வரும் வழியில் பொலிஸூக்கு போக முன்
அபராத பணத்தை செலுத்த மகரகம தபால் நிலையத்திற்கு அவர் சென்றார். ஆனாலும்
மகரமக தபால் நிலையத்தில் பிற்பகல் 3 மணியின் பின்னர் அபராத பணம் செலுத்த
முடியாது எனவும் மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அண்மையில் உள்ள தபால்
நிலையத்தில் இரவு 8 மணிவரை அபராத பணம் செலுத்த முடியம் எனவும் தபால் நிலைய
அதிகாரி சொல்லவே அதன் பின்னர் குறிப்பிட்ட நபர் வைத்தியசாலைக்கு அண்மையில்
உள்ள தபால் நிலையத்துக்கு சென்று அபராதத்தை செலுத்திவிட்டு பொலிஸூக்கு
சென்று தனது அனுமதிப்பத்திரத்தை மீண்டும் பெற்றுக் கொண்டு ஊருக்கு
திரும்பினார்.
இந்நிகழ்வு
மோட்டார் வாகன கட்டளைச் சட்டத்தின் கீழ் அபராதம் செலுத்துவதற்கான
விதிமுறைகள் தொடர்பிலும் சொத்துக்கள் சட்டம் தொடர்பிலும் மிக முக்கிய
பிரச்சினைகள் இரண்டை சுட்டிக்காட்டுகிறது.
மோட்டார் வாகன கட்டளை சட்டத்தின் படி தவறு செய்யும் நபர் அபராதத்தை செலுத்த தபால் நிலையம் ஒன்றை தேடிச் செல்ல வேண்டும்.
வாகன
சாரதி தபால் நிலையம் மூடியிருக்கும் நேரத்தில் தவறிழைத்தால் குறிப்பிட்ட
வாகன சாரதி தூரப் பிரதேசத்திலிருந்து வந்தவராக இருந்தாலும் அபராதத்தை
தபால் நிலையமொன்றில் செலுத்தி அனுமதிப்பத்திரத்தை எடுத்துச் செல்ல தவறு
நடந்த பிரதேசத்திலேயே அன்றைய இரவை கழிக்க வேண்டியிருக்கும்.
இல்லாவிடில்
தூரத்தில் உள்ள தனது ஊருக்கு சென்று 14 நாட்களுக்குள் வாகன
அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காக மட்டும் மீண்டும் தூர
பிரதேசத்தலிருந்து தவறு நடந்த பிரதேசத்துக்கு வந்து தான்
அனுமதிப்பத்திரத்தை பெற்றுச் செல்ல வேண்டும்.
மின்சாரக்கட்டணம்,
தொலைபேசிக்கட்டணம், போன்ற அனைத்து வகையான கட்டணங்களையும் நாட்டின் எந்த
சூப்பர் மாக்கட்டிலும் செலுத்துவதற்கான வசதி இருக்கிறது.
இவற்றை செலுத்த இப்படியான இலகுவான ஒரு வழிமுறை இருக்கும் போது, போக்குவரத்து
விதிகளை மீறும் போது விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த
மேற்குறிப்பிட்டவாறான இலகுவான ஒரு முறையை நடைமுறைக்கு கொண்டு வர
முடியாததற்கான காரணம் என்ன?
தற்சமயம்
நடைமுறையில் இருக்கும் முறை மூலம் வாகனசாரதிகள் அனுபவிக்கும் துயரம் மிகப்
பாரியது. ஆனாலும் இம்முறையை அதிகாரிகளால், ஆட்சியாளர்களால் மிக இலகுவாக
மாற்ற முடியும். அப்படியிருக்கும் போது ஏன் இவர்கள் அதனை இலகுவான முறை
ஒன்றுக்கு மாற்றாமல் இருக்கின்றனர்?
இப்படியான
தேவையற்ற, மக்களை கஷ்டப்படுத்தும் நடைமுறைகளால் நாட்டில் தோன்றியுள்ள
துரதிஷ்டவசமான நிலைமைகள் தொடர்பில் கண்டும் காணதது போல் இருக்க
இந்நாடடின் ஆட்சியாளர்களுக்கு வெட்கம் என்பது கிடையவே கிடையாதா?
என இவ்வாறு விக்டர் ஜவன் கேள்வி எழுப்புகிறார்.
விக்டர்
அய்வன் இங்கு சுட்டிக்காட்டியுள்ள விடயம் யாரும் கவனம் செலுத்தாத, ஆனால்
பலரையும் தனிப்பட்ட முறையில் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கும் ஒரு முக்கிய
விடயமாகும். உண்மையில்
இது தொடர்பில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இதனை
ஆட்சியாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது நம் அனைவரதும் கடமையாகும்.
இந்தக்
கஷ்டமான நடைமுறையால் லஞ்சம் கொடுக்க கனவில் கூட நினைத்திருக்காதவன் கூட
லஞ்சம் கொடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறான். உதாரணமாக கொழும்பை சேர்நத
ஒருவர் யாழ்ப்பாணத்தில் சென்று இப்படி வீதி ஒழுங்கு மீறல் குற்றத்துக்கு
அபராதம் செலுத்த அல்லது நீதிமன்ற வழக்குக்கு செல்ல வேண்டிய ஏற்பட்டால்
பெரும்பாலானவர்கள் குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரிக்கு எத்தனையாவது லஞ்சம்
கொடுத்துவிட்டு தப்பிக்கவே முயற்சிப்பார்கள். பெரும்பாலான இடங்களில் இது
தான் நடக்கிறது.
அதேநேரம் இந்த அபராத பணத்தை செலுத்துவதற்கு விக்டர் அய்வன் குறிப்பிடுவது போல
இலகுவான ஒரு நடைமுறை இருந்தால் நிச்சயம் 100 வீதமானாவர்கள் லஞ்சம்
கொடுக்காமல் அரசுக்கு அபராதத்தையே செலுத்துவார்கள். இதன் மூலம் அரசின்
வருமானமும் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும்.
முஸ்லிம்களை
பொறுத்தவரை லஞ்சம் வாங்குவதோ கொடுப்பதோ இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட
பெரும்பாவமாகும். ஆனாலும் இப்படியான சந்தர்ப்பங்களில் பலரும்
அப்பெரும்பாவத்தை நிர்ப்பந்தமாக செய்யவே செய்கின்றனர்.
மேலும்
நிர்ப்பந்தமான சந்தர்ப்பங்களில் இப்படி லஞ்சம் கொடுப்பது ஹராமா ஹலாலா என
பத்வா தேடும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம். ஏன் நமக்கே அந்த சந்தேகம்
இருக்கத்தான் செய்கிறது. சிலர் நிர்ப்பந்தத்தில் இப்படி லஞ்சம் கொடுப்பது
கூடும் என மறைமுறைகமாக பத்வா கொடுக்காமலும் இல்லை.
தினமும்
இப்படி நிர்ப்பந்தத்தையே காரணம் காட்டி இப்பெரும் பாவத்தை தொடராமல்
இந்நடைமுறையை மாற்றுவதற்கான அழுத்தத்தை நாம் அரசின் மீதும் அரசியல்
தலைமைகள் மீது கட்டாயம் பிரயோகிக்க வேண்டும். இதற்கு நல்லதொரு ஆரம்பமாக
விக்டர் அய்வனின் இக்கட்டுரை அமையட்டும்.
i like it
ReplyDeleteNot only Bribery , commission based business is also
ReplyDeleteunacceptable in Islam but many Muslim businessmen
give and take commissions ignoring the rules or
without knowledge . Some Ulemmas are very often seen
going behind every successful Muslim businessman
for a better living . Now that free Korans are
enthusiastically distributed among non-Muslims for a
better understanding about Islam and Muslims , don't
forget that they will question how many Muslims
follow Islam ! So, be ready !
உண்மையிலே சிறந்த விடயம் இதில் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்குத்தெரிந்த அளவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்...
ReplyDeleteதனது இலாபத்துக்காக ஆட்சியாளரகள்/ அரசியல்வாதிகளின் பின்னால் போவதையும், இலஞ்சத்தையும் வன்மையாக கண்டிக்கின்றது.
ReplyDeleteஎங்கட காகா மார்களுக்கு வழிந்து போவதும் அரசியல்வாதிகளின் அல்லக்கையாவதும் அலவா தின்றமாதிரி...வெட்கம் கெட்ட கூட்டம் இதற்கு பிச்சையெடுக்காலம்...