பணத்தை காட்டிலும் நாட்டை பற்றி சிந்தித்து விளையாடினோம் - அர்ஜூன
அக்காலத்தில் அநாவசிய தலையீடுகள் இல்லை. என வீரர்களாகிய நாம் ஒற்றுமையாக செயற்பட்டோம். 96 வெற்றியின் இரகசியத்தை முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் தலைவர் அர்ஜீன ரணதுங்க வெளியிட்டார்.
பணத்தை காட்டிலும் நாட்டை பற்றி சிந்தித்து விளையாடியமையினாலேயே 96 ம் ஆண்டு உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டோமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது 96ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளின் பொழுது அநாவசிய அரசியல் தலையீடுகள் இருக்கவில்லை இதுவே போட்டியை வெற்றிக்கொள்வதற்கான பிரதான இரகசியமென குறிப்பிட்டார். இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு மற்றும் சேவ் த ஸ்போர்ட் விளையாட்டு நிறுவணம் ஆகியன ஒன்றினைந்து ஏற்பாடுச் செய்த 96 கொண்டாடுவோம் இறுதி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.
' ஒரு முறையில் அணியொன்றை உருவாக்க இயலாது. பல ஆண்டுகளாகவே அணியொன்றை உருவாக்க வேண்டும். 96ம் ஆண்டு உலக கிண்ண போட்டிகளிற்கு ஆயத்தமாகும் பொழுது இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே எந்தெந்த அணிகளுடன் விளையாட வேண்டுமென்று முடிவெடுத்தோம். இச்சந்தர்பத்தில் நான்கு மூத்த விளையாட்டு வீரர்கள் இருந்தார்கள். துலிப் மென்டிஸ் தெரிவுக்குழுவின் தலைவராக செயற்பட்டார். கிரிக்கெட் நிறுவணத்தின் தலைவராக ஆனா புஞ்சி ஹேவா செயற்பட்டார். அவர் தெரிவுக்குழு உறுப்பினர்களுடன் எவ்வித தொடர்புகளையும் பேணவில்லை. அணியை தேர்வுச் செய்யவும் இல்லை. விளையாட்டு துறை அமைச்சருடன் கதைக்கவும் இல்லை. அதாவது எவ்வித அரசியிற் தலையீடுகளும் இருக்கவில்லை. ஆனால் கடந்த காலத்தில் இவையனைத்தும் அரங்கேறியது. அநாவசிய தலையீடுகள் காரணமாக வீரர்கள் மன உளைச்சலிற்காளாகியுள்ளார்கள். எதனையும் அறியாதவர்கள் விளையாட்டில் ஈடுப்படாதவர்கள் ஒரு போதும் துடுப்பு மட்டையை கைகளால் பிடிக்காதவர்கள் தங்களுக்கு புகழை சேர்த்துக்கொள்ளும் பொருட்டு கிரிக்கெட் விளையாட்டை பயன்படுத்திக் கொண்டார்கள். அதன் பிரதிபலனாக கிரிக்கெட் அணி பலவீனமடைந்தது. இன்று பணமே முன்னிலையிலுள்ளது. 96ம் ஆண்டு உலக கிண்ண கோப்பையை வெற்றிக் கொண்ட பொழுது அமெரிக்க டொலர் 30 000 பணப்பரிசில் கிடைத்தது. அன்று ஒரு டொலரின் பெறுமதி ரூபாய் 70 -80 வரையில் காணப்பட்டது. 14 பேரும் அப்பணத்தை பிரித்து எடுத்தோம். அன்று பணத்தை பற்றி பெரிய எண்ணங்கள் இருக்கவில்லை. வெற்றிக்கே மதிப்பளித்தோம். இதற்கான சிறந்த உதாரணம் யாதெனில் என்னிடம் காசோலையை கையளித்தார்கள். உலக கிண்ணத்தையும் கையளித்தார்கள். அப்பொழுது அங்கிருந்த மக்களின் மேல் மோதுண்டமையினால் நான் கீழே விழுந்தேன். அப்பொழுது நான் உலக கிண்ணத்தை பற்றி பிடித்துக் கொண்டேன் காசோலை நழுவி கீழே விழுந்ததென ...' முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க தெரிவித்தார்.
96 கொண்டாடுவோம் நிகழ்வினை இலங்கை துறைமுக அதிகாரச் சபையின் விளையாட்டு பிரிவு மற்றும் சேவ் த ஸ்போர்ட் நிறுவணம் ஆகியன ஒன்றினைந்து ஒழுங்குச் செய்தது. விளையாட்டு பயிற்சி முகாம் விளையாட்டு தொடர்பாக கலந்துரையாடல் மற்றும் மக்கள் சேவை ஆகியன இந்நிகழ்வுகளில் உள்ளடங்கிருந்தது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜீன ரணதுங்க 96 வெற்றி அணியின் உறுப்பினர்களான ரொசான் மாநாம மேலும் கருத்துரைக்கையில் தற்போதைய கிரிக்கெட் பரிபாலனச் சபையை கடுமையாக விமர்சித்தார். ' நாங்கள் விளையாடும் காலங்களில் எங்களிடையேயும் கருத்து வேறுப்பாடுகள் நிலவின ஆனாலும் எங்களுடைய தேவை நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதாகும்.
96ம் ஆண்டு முதல் இன்று வரையில் ஒரே குழுவினரே கிரிக்கெட் பரிபாலனச் சபையில் அங்கம் வகிக்கின்றார்கள். கார்ட் விளையாடும் பொழுது அட்டைகளை மாற்றுவது போன்றாகும். எங்களுக்கென பொதுவான திட்டமொன்றிருந்ததென..' ரொசான் மாநாம குறிப்பிட்டார். இக்கருத்துடன் உடன்பட்ட 96ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஆனா புஞ்சிஹேவா தெரிவித்ததாவது ' எந்தொரு விடயத்தியத்தையும் திட்டமிட்டு செயற்படுத்த வேண்டும். அன்று நாங்கள் எங்களுடைய முதலாவது செயற்பாடாக பெந்தோட்டைக்கு விஜயமேற்கொண்டு உரிய முடிவுகளை மேற்கொண்டோம். அன்று நாங்கள் 2000 ம் ஆண்டளவில் இலங்கை அணியை சிறந்த அணியாக உருவாக்குவோமென எண்ணினோம். ஆனால் இன்று இவ்வாறானதொரு திட்டமிடலோ அல்லது குறிக்கோளோ இல்லை. நிறுவணத்திற்கோ அல்லது கிரிக்கெட் அணிக்கோ இவ்வாறானதோர் தனிப்பட்ட திட்டமிடல் இல்லையாயின் நாங்கள் மிதந்த நிலையேயே இருப்போம். இதுவே தற்பொழுது கிரிக்கெட் நிர்ருவாகச் சபை எதிர்க்கொள்கின்ற பிரச்சினையாகும். இது பல ஆண்டுகளாக தொடரும் பிரச்சினையாகுமென ... ' குறிப்பிட்டார். அச்சமயம் ' நாங்கள் பயிற்சி போட்டியை பகிடியாக கருதவில்லை. வெற்றியீட்டவே விளையாடினோம். எதிரணியுடன் ஒரு பொழுதும் நட்புறவை பேணவில்லை. நட்புறவை பேணினால் அர்ஜீன அண்ணாவிடமிருந்து பேச்சு வாங்க நேரிடும். எப்பொழுதும் ஒழுக்கமே முன்னிலை வகித்தது. அதுவே அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்ததென ...' பிரமோதய விக்கிரமசிங்க கருத்து வெளியிட்டார். உலக கிண்ண தொடரின் பொழுது ஒரு போட்டியிலேனும் நான் விளையாடவில்லையாயினும் நான் என்னுடைய கடமையை உரிய முறையில் நிறைவேற்றினேன். என்று தெரிவித்தார்.
' நான் எப்பொழுதும் விளையாட்டு மைதானத்திற்குள் உட்புகவே ஆவலாக இருந்தேன். ஆனாலும் அதற்கான சந்தர்பம்கிட்டவில்லை. இதனை எண்ணி நான் வருந்தவும் இல்லை. நான் விளையாடினாலும் விளையாடாவிட்டாலும் விளையாடும் மனப்பான்மையில் இருந்தேன். நாங்கள் 14 பேரும் ஒரு குழுவாகவே செயற்பட்டோம். அதுவே எங்கள் வெற்றியின் இரகசியமாகுமென...' உப்புல் சந்தன குறிப்பிட்டார்.

Post a Comment