தேர்தல் நடத்தப்படும் தினத்தை, யாராலும் தீர்மானிக்க முடியாது - மஹிந்த தேசப்பிரிய
தேர்தல் நடத்தப்படும் தினத்தை யாராலும் தீர்மானிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இன்று -03- நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்
துறைசார் அமைச்சர், ஜனாதிபதி, தேர்தல் ஆணைக்குழு, ஜோதிடர்கள், ஊடக நிறுவனங்கள் அல்லது வேறும் தரப்பினருக்கு தேர்தல் நடைபெறும் தினம் பற்றி அறிவிக்க அதிகாரமில்லை. தேவை என்றால் ஜனாதிபதி தேர்தல் பற்றி கூற முடியும்.
உள்ளுராட்சி மன்றத்தேர்தல்கள் எவ்வாறு எப்போது நடத்துவது என்பது பற்றி பேசப்படுகின்றது.
பதவிக் காலம் பூர்த்தியாவதற்கு முன்னதாக ஆறு மாதங்களுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளர் அல்லது தேர்தல் ஆணைக்குழு தேர்தல் பற்றி தீர்மானிக்க முடியும் என்றே சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
This is an outcome of good governance. But, the present government is in election phobia. Already they had fear for Presidential election, after that in general election. Now also, they have phobia for local government election. They must come out from that
ReplyDelete