Header Ads



இஸ்மாயில் ஹாஜியார் வபாத்தானார்

(முஹ்ஸி) 

புத்தளம் மக்களின் உள்ளங்களில் என்றும் நிறைந்திருக்கும் டீ.எம்.இஸ்மாயில் ஹாஜியார் தனது 74 ஆம் வயதில் வபாத்தானார். إنَّا لله وإنا إليه راجعون அவர் சிறிது காலமாக கடும் நோய்வாய்ப்பட்டிருந்தார். மரணிக்கும் போது கொழும்பு தேசிய மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறந்த பண்பாடுகளும், முன்மாதிரிகளும் கொண்டவர். எல்லோருடனும், இனிமையாக சிரித்த முகத்துடன் பழகும் சுபாவமுடையவர். நகைச்சுவையாக பேசுபவர். சமூகத்தில் நன்மதிப்பு மிக்கவராக திகழ்ந்தவர். தம் பிள்ளைகளை கற்றவர்களாக, பிறருக்கு பயனுள்ளவர்களாக உருவாக்கியவர்.சமூக நலப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.

வடமேல் மாகாண சபை உறுப்பினராக, புத்தளம் நகர சபை எதிர்க் கட்சித் தலைவராக, புத்தளம் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி அமைப்பாளராக அரசியல் களத்தில் தன்னை அர்ப்பணித்து சகல இன மக்களுக்கும் சேவை செய்தவர். அவர் தலைமையில் ஒரே அணியில் புத்தளம் நகர சபைக்கு உறுப்பினராக செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. நீண்ட காலமாக அவருடன் நெருங்கிப் பழகி பல நல்ல விடயங்கள். அனுபவங்கள் என்பவற்றை அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது. சிறந்த மார்க்கப் பக்தி கொண்டவராக திகழ்ந்த இஸ்மாயில் ஹாஜியார் புத்தளம் முஸ்லிம்களின் வரலாற்றில் என்றுமே பிரிக்க முடியாத பன்முக ஆளுமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னிப்பானாக. அன்னாரின் அனைத்து நற்பணிகளையும் ஏற்றுக் கொள்வானாக. அன்னாரின் மண்ணறை, மறுமை வாழ்வு மிகவும் பிரகாசமானதாக அமைய அருள் புரிவானாக. அன்னாரை உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவனத்துக்கு சொந்தக்காரனாக ஆக்குவானாக.

No comments

Powered by Blogger.