மூத்த ஊடகவியலாளர், அளுகர்தீன் காலமானார்
மூத்த ஊடகவியலாளரும் பிரபல மொழிப் பெயர்ப்பாளருமான எம்.ரி.எம்.அளுகர்தீன் (73) நேற்று காலமானார்.
சிறிது காலமாகச் சுகவீனமுற்றிருந்த இவர் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்ததோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி அலுவலகத்தின் உதவிச் செயலாளர் அமைச்சர் பௌசியின் ஊடகச் செயலாளர், மாலைத்தீவு தூதுவராலய ஊடக அதிகாரி பதவி உட்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.
கலாசார அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை நுண் கலைச் சபையின் தலைவராகப் பணி புரிந்த இவர் பல்வேறு முஸ்லிம் இயக்கங்களில் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் பாராட்டுக்குள்ளாக்கப்பட்ட இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சிபாரிசில் இலங்கை பத்திரிகை நிறுவனத்தினால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குதுப்தீன், லுகுமுத்தின், முர்சிதீன் ஆகிய மூன்று மகன்மாரின் தந்தையான இவரது ஜனாஸா நேற்று இரவு பூகொடை குமரிமுல்லையில் ஜும் ஆப் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செயப்பட்டது.
அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி உட்பட பெருந்தொகையானோர் ஜனாஸாவில் கலந்துகொண்டனர்.
இவரது மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபச் செதி ஒன்றை விடுத்துள்ளது.
Post a Comment