அப்ரிடியின் பேச்சுக்கு, இந்தியா கண்டனம்
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நேற்று முன்தினம் நடந்த சூப்பர்–10 சுற்று லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வி கண்டது. போட்டி முடிந்த பிறகு பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் அளித்த அமோக ஆதரவு குறித்து கேப்டன் அப்ரிடியிடம் கேட்ட போது, ‘காஷ்மீரை சேர்ந்த மக்கள் நிறைய பேர் இங்கு வந்து எங்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இதேபோல் முந்தைய போட்டிகளில் ஆதரவு அளித்த கொல்கத்தா ரசிகர்களுக்கும் நன்றி’ என்று கூறினார்.
காஷ்மீர் ரசிகர்கள் ஆதரவு குறித்து அப்ரிடி தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் அனுராக் தாகூர் கண்டனம் தெரிவித்துள்ளார். அனுராக் தாகூர் கூறுகையில், ‘அப்ரிடி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது அரசியல் ரீதியாக சரியானது கிடையாது. இதுபோன்ற விஷயங்கள் எல்லாவற்றிலும் இருந்து வீரர்கள் ஒதுங்கி இருக்க வேண்டும். இதுபோன்ற காரணத்தினால் தான் அவர் பாகிஸ்தானிலும் விமர்சிக்கப்பட்டார்’ என்றார்.
ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா கூறும் போது, ‘அப்ரிடியின் கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அதே நேரத்தில் இந்திய ரசிகர்களை அவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதை மட்டும் சொல்லி கொள்ள விரும்புகிறேன். யார் சிறப்பாக விளையாடினாலும் அவர்களை எப்பொழுதும் பாராட்டும் இயல்பு கொண்டவர்கள் இந்திய ரசிகர்கள். எல்லோரும் இந்தியர்கள் தான். அவர்களை காஷ்மீரை சேர்ந்தவர்கள் என்று வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய ரசிகர்களை பொறுத்தமட்டில் அந்த ஆட்டம் பொதுவானதாகும். எனவே விளையாட்டில் அரசியலை நுழைக்க முயற்சிப்பதை தவிர்க்கவும். எல்லா இந்தியர்களும் கிரிக்கெட்டை நேசிப்பவர்கள்’ என்று தெரிவித்தார்.
காஷ்மீரிகள், தம்மை தமது சொந்த அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடாத்துவதனால் தமது நாட்டு அணியை எதிர்த்து விளையாடும் அல்லது தமது நாட்டுக்கு சவாலாக விளங்கும் அணிக்கு அணிக்கு ஆதரவு தருவது இயல்பே. இலங்கையிலும் முன்னர் சிறுபான்மை மக்களில் கணிசமானோர் சிங்கள அணியை எதிர்த்து விளையாடும் அணிக்கு ஆதரவு தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தமை நாம் அறிந்ததே..
ReplyDeleteஅப்ரிடி தான் உணர்ந்ததை வெளிப்படையாகப்பேசும் இயல்புடையவர். இந்திய, பாகிஸ்தான் ரசிகர்கள் தமது அணியின் நலன் தவிர வேறு எதற்காகவும் பிறிதொரு அணிக்கு ஆதரவு தராதவர்கள். இதுவே யதார்த்தம். அது இந்திய அரசியல்வாதிகள் உலகிற்கு போலியாக காண்பித்துக்கொண்டிருக்கும் கபட முகத்தை அம்பலப்படுத்தியிருக்கின்றது போலும்.
இந்திய ரசிகர்களை பற்றி யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. 1996 இல் கல்கத்தா ரசிகர்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் செய்தது மறக்கவில்லை.
ReplyDeleteஆனாலும், அப்ரிடி, பாகிஸ்தான் - இந்திய எல்லைப் பிரச்சினை அரசியலை விளையாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கக் கூடாது.
அப்ரிடி ஒரு மேட்ச் வின்னர் அல்ல.
பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கட்டு அணியினர் சரிவர மாட்டார்கள், பிரியாணி சமைக்கத்தான் சரி என்று அப்ரிடி பெண்களை கேவலப் படுத்தினார். அப்ரிடியின் அணி தோல்வியடைந்த அதே தினத்தில், பெண்கள் அணியினர் இந்திய மகளீர் அணியை வெற்றி கொண்டனர், அப்ரிடிக்கு நல்ல ஒரு பதிலடி.
தான் உணர்ந்ததை வெளிப்படையாக பேசுபவர் என்பதற்காக, மூளையை பாவிக்கத் தேவையில்லையா?
ReplyDeleteபேச முன் யோசித்து பேச வேண்டும். வெளிப்படையாக பேசுகின்றேன் என்று முட்டாள்தனமாக வாயில் வந்ததை எல்லாம் உளறலாமா?
இனிய குரலுக்காக ஒரு பாடகனை ரசிப்பவர்கள் அவன் எந்த மதம், இனம், அவனுடைய கொள்கைகள் என்பதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லை!
ReplyDeleteஅப்ரிடியிடம் இருக்கும் கிரிக்கட் ஆட்டத்திற்குத் தேவையான சிறப்பு அம்சங்களை ரசிப்பதோடு நாம் நிறுத்திக்கொள்வதுதான் நல்லது. அவருடைய பெண்கள் பற்றிய கணிப்புகள் அவருடைய மதநம்பிக்கைகள் பற்றிய விடயங்களை கிரிக்கட்டுக்குள் கொண்டு வந்து குழப்பிக்கொள்ளத்தேவையில்லை.
Jesslya அப்ரிடி ஒரு சிறந்த கிரிக்கட் வீரர் அல்ல. சில பெண்களின் கண்களுக்கு வேண்டுமானால் ஒரு அழகான ஆணாகத் தெரியலாம். சிறந்த கிரிக்கட் வீரர் என்றால் அதற்கென்று தகுதிகள் உள்ளன.
ReplyDeleteஅப்ரிடியும் விளையாடிநோமா, தோற்றோமா என்று பொத்திக்கொண்டு போயிருந்தால், யாரும் விமர்சித்து இருக்க மாட்டார்கள். பகிரங்கமாக பெண்கள் அணியை கேவலப் படுத்தியது, அரசியல் பிரச்சினையில் கருத்து சொன்னது என்பவைதான் காரணம்.
இஸ்லாத்தை நேசிக்கும் அப்ரிடியை நேசிக்கும்படி, இஸ்லாத்தை வெறுக்கும் ஜெஸ்லியாவை அல்லாஹ் ஆக்கிவிட்டான்.
ReplyDeleteஅப்ரிடி இஸ்லாத்தை மிகவுமே நேசிக்கும் ஒருவர்.
அல்லாஹு அக்பர்.
அப்ரிடி என்ற ஒரு தனி மனிதரிடம் உலகம் முழுவதிலுமுள்ள சகல கிரிக்கட் வீரர்களிடமும் பொதிந்திருக்கும் திறமைகளை ஒட்டுமொத்தமாக எதிர்பார்ப்பதுதான் அமீர் உமாட் போன்றவர்களின் ஏமாற்றங்களுக்குக் காரணம்.
ReplyDelete1996 அக்டோபரில் பாகிஸ்தான் அணி கென்யாவில் நடைபெற்ற சுற்றுப்போட்டியில் விளையாடிக்கொணடிருந்த அதேவேளை 19 வயதுக்குட்பட்டோருக்கான சுற்றுப்பயணத்தில் மேற்கிந்தியத் தீவுகளில் அந்த அணிக்கு எதிரான போட்டித்தொடரில் லெக் ஸ்பின்னராக பந்துவீசிக்கொண்டிருந்த ஒரு பதின்வயது வீரர் அப்ரிடி.
கென்யாவில் லெக் ஸ்பின்னராகிய முஸ்தாக் அஹமட் எனும் வீரருக்கு சுகயீனம் ஏற்பட்டதன் காரணமாக அப்ரிடி விமானம் மூலம் நைரோபிக்கு அழைக்கப்பட்டார். அக்டோபர் 2ம் திகதி தனது முதலாவது போட்டியில் கென்யாவுக்கு எதிராகப் பந்துவீசிய அப்ரிடியை அப்போது ரசிகர்கள் யாருக்கும் தெரியாது.
ஆனால் அடுத்த போட்டியான இலங்கைக்கு எதிரான போட்டிக்காக நடைபெற்ற வலைப்பயிற்சியின்போது அப்ரிடி பந்துகளை அடித்தாடிய விதத்தை பார்த்துவிட்டு அக்டோபர் 4ம் திகதி ஓட்டவிகிதத்தை உயர்த்துவதற்காக மூன்றாவது வீரராக துடுப்பெடுத்தாட வைத்தார்கள்.
அன்றைய தினம், தனது முதலாவது இன்னிங்ஸில், 37 பந்துகளில் 11 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளை விளாசி அப்ரிடி வைத்த உலகசாதனை 1996 அக்டேபார் 4 முதல் 2014 ஜனவரி வரை ஏறத்தாழ 17 ஆண்டுகள்ங்கள் நீடித்திருந்தது. ஒரே நாளில் கோடிக்கணக்கான கிரிக்கட் ரசிகர்களை அள்ளிய பதின்வயது வீரர்தான் அப்ரிடி. அவ்வாறு கிரிக்கட்டுக்கு வந்த அப்ரிடியிடம் நாம் வைத்திருக்கும் எதிர்பார்ப்பு அதிகம் என்பதால்தான் ஏமாற்றமும் அதிகம்.
பந்துவீச்சாராக பிரவேசித்த அவருக்கு பல சமயங்களில் எதிரணியின் திட்டங்களை முற்றாகக் குழப்பியடிக்கும் வண்ணம் அதிரடியாக துடுப்பாட முடிந்டதிருக்கின்றமையை வைத்து அவரை கிரிக்கட் உலகின் சுப்பர்மேனாக கருதுவதை என்னவென்பது..?
சவ்துல் ஹக்,
ReplyDeleteசரி, ஒரு பேச்சுக்கு உங்கள் வாதப்படியே வைத்துக்கொள்வோமே. தான் வெறுக்கும் ஒன்றைத் தீவிரமாகப் பின்பற்றும் ஒருவரை கிரிக்கட் திறமைக்காக நேசிப்பதிலிருந்தே ஜெஸ்லியாவின் நேர்மையை புரிந்துகொள்ளலாம் அல்லவா..?
இஸ்லாத்தை நான் வெறுக்கின்றேன். ஆம், உண்மைதான்! ஆனால், எப்படியான இஸ்லாத்தை தெரியுமா..? உலக மாந்தர்கள் அனைவருக்கும் சமமாகப் இறைவனால் அனுப்பப்பட்டுப் போதிக்கப்பட்ட ஒன்றை ஆண்களுக்குச் சார்பாகத் திரிபுக்குள்ளாக்கி இடைச்செருகல்கள் உண்டாக்கி பால் சமத்துவம் தராமல் வெறும் ஆணாதிக்க மதமாகக்கப்பட்டுள்ள இஸ்லாத்தை (அது உண்மையில் இஸ்லாமே அல்ல) வெறுக்கின்றேன்.
நீங்கள் தங்க ஊசி என்று கூறுவதற்காக நாங்கள் அதனை எங்கள் கண்களில் பாய்ச்சிக்கொள்ள வேண்டியதில்லையே..?
இஸ்லாத்தின் மூலாதாரங்கள் குரானும், ஹதீசும், ஆகவே நீங்கள் நினைத்தபடி இஸ்லாம் உருவாக்க முடியாது.
ReplyDeleteஅல்லாஹ்தான் சொல்கின்றான், ஆண்களுக்கு பெண்களை நான்கு நான்காகவோ, மூன்று மூன்றாகவோ, இரண்டு இரண்டாகவோ, முடியாவிட்டால் ஒன்றையோ திருமணம் செய்யும்படி. (சூரத்துல் நிசா)
ஆனால் பெண்களுக்கு அப்படி சொல்லவில்லை. உங்களுக்கு இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், இஸ்லாத்தை மற்ற முடியுமா? குரானை மாற்ற வேண்டுமா?
சவுத்துல் ஹக்! அவருக்கு தமிழ் இலக்கிய கதைகள், படங்கள் , பாடல்கள் அவைகளைப்பற்றித்தான் தெரியும். இந்த மாதிரியான போலி பெண்கள் சமத்துவம் பேசுபவர்களிடம் கேளுங்கள் ஏன் ஓட்டப்பந்தயம் , குத்துச்சண்டை , கிரிக்கெட் இப்படி பல விளையாட்டுக்கள் பெண்கள் அணி ஆண்கள அணி, என்று பிரித்துள்ளார்கள் ஏன் பெண்களை ஆண்களுடன் சரி சம்மாக ஓட்டப்பந்தயம் , குத்துச்சண்டை போன்றவற்றில் கலந்து கொள்ள விடமாட்டார்கள் என்று?
ReplyDeleteகூத்தடிப்பது, கேளிக்கைகளில் மாத்திரம்தான் இவர்கள் பெண்கள் சமத்துவம் பற்றி பேசுகிறார்கள்.