Header Ads



சீனாவை அச்சுறுத்தலாக அன்றி, ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும் - சந்திரிகா

சீனாவை அச்சுறுத்தலாக அன்றி, ஒரு வாய்ப்பாகவே பார்க்க வேண்டும், என்று புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க.

புவிசார் அரசியல் மற்றும் புவிசார் பொருளாதாரம் தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சும், ஓஆர்எவ் என்ற சிந்தனையாளர் குழாமும், இணைந்து ஒழுங்கு செய்திருந்த ரைசினா கலந்துரையாடல் என்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

”இந்தப் பிராந்தியத்தில் இந்தியாவைப்  போலவே சீனாவும் ஒரு பெரும் பொருளாதார சக்தி.

பிராந்தியத்தில் உள்ள நாடுகள், சீனாவை அச்சுறுத்தலாகப் பார்க்காமல், அதனை ஒரு வாய்ப்பாக பார்க்க வேண்டும்.

இந்தப் பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் தடையாக இருக்கின்றன.

நாடுகளுக்கிடையில் நம்பிக்கை, கட்டியெழுப்பப்பட்டு, ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும்.

பிராந்தியத்தில் உள்ள எல்லா நாடுகளுடனும் சிறிலங்கா நட்புறவைக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாடுகளுக்கிடையில் பாலமாகத் திகழமுடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Hon.Chandrika is a peace maker. Now she is moving to achieve that in SL.

    ReplyDelete

Powered by Blogger.