"அடுத்தவர்களுக்குக் கொடுத்தால், எமக்கும் தா"
-நஜீப் பின் கபூர்-
புதிய யாப்பொன்று உருவாக்கப்பட இருக்கின்றது. அதன் ஊடக தென் பகுதி மக்களினதும் வடக்குக் கிழக்கு மக்களினதும் ஏனைய இனங்களினது பிரச்சனைக்கு - ஆதங்கங்களுக்குத் தீர்வு காணப்பட இருக்கின்றது. என்ற ஒரு நல்ல நம்பிக்கை நாட்டில் ஏற்கட்டிருக்கின்றது. ஆனால் நாம் இந்த யாப்பு விவகாரம் எதிர்பார்ப்பது போல் சுலபமாக நடக்கக் கூடிய ஒரு விவகாரமாக அல்ல என்பதனையும், இந்த யாப்பு பிறக்க முன்னரே அதற்குக் கருவரையிலே பல ஆபத்துக்கள் இருக்கின்றன என்ற எச்சரிக்கையை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் எமது வார ஏட்டில் முன் கூட்டியே சொல்லி இருந்தோம்.
இந்த அரசியல் யாப்புத் தொடர்பில் பலம் வாய்ந்த வெகுஜன இயக்கத்தை கட்டியெழுப்பிய சோபித்த தோரர் இன்று நம் மத்தியில் இல்லை. அவர் தோற்றுவித்த வெகுஜன இயக்கம் செயல்பட்டு வந்தாலும் அவர் கொடுத்த பலம் வாய்ந்த தலைமைத்துவத்தை இப்போது இருக்கின்றவர்களினால் எவ்வளவு தூரம் கொடுக்க முடியும் என்பது கேள்விக்குறியே!
யாப்புத் தெடர்பான வன்முறைகள் பற்றிப் பார்ப்பதற்கு முன்னால் இந்த யாப்புத் தொடர்பான அடுத்த கட்ட நகர்வுகள் எப்படி முன்னெடுக்கப்பட வேண்டி இருக்கின்றது என்பதனைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
நமக்கு ஏன் புதியதோர் யாப்புத் தேவைப்படுகின்றது என்று பார்க்கின்ற போது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை முதன்மைப்படுத்திய யாப்பொன்றே இன்று வழக்கில் இருக்கின்றது. அது ஏற்கெனவே ஆட்டம் கண்டிருக்கின்றது. எனவே தான் அண்மையில் மைத்திரி வெற்றியுடன் ஜனாதிபதியின் அதிகரங்களை ஏறக்குறைய 60 முதல் 65 வீதம் வரை குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்த யாப்பின் பிரகாரம் மாகாண சபைகளின் செயல்படுகள் தொடர்பிலும் கேள்விகள் எழுந்திருக்கின்றது.
நடை முறையில் உள்ள யாப்பில் திருத்தங்களைச் செய்து யாப்பை திருத்துவது என்பது, பழைய அடித்தளத்தில் புதிய கட்டிடம் அமைப்பது போன்றது. எனவே திருத்தங்கள் செய்து யாப்பை சரி செய்வது என்பதும் சாத்தியம் இல்லாத விடயம். எனவே முன்வைக்கப்படுகின்ற யோசனைகளை பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் உப குழுக்களாகப் பிரிந்து நின்று தீர்மானங்களை எடுப்பார்கள். அதன் பின்னர் பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய 21 பேர் அடங்கிய நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு அது தனது செயல்பாடுகளை முன்னெடுக்கும்.
மேலும் இது பற்றிய மக்களிடம் கருத்துப் கோறும் குழுவினரிடமிருந்து பெற்றுப் கொண்ட யோசனைகளும் இந்த யாப்பில் உள்வாங்கப்பட இருக்கின்றது. இதன் அடிப்படையில் தயாரிக்கப்படும் யாப்புத் தொடர்பான நகல் பாராளுமன்றத்தால் கலந்துரையாடப்பட்டு விவாதிக்கப்பட இருக்கின்றது. அந்த நேரத்தில் உறுப்பினர்களுக்குத் தமது திருத்தங்களை முன்வைக்க முடியும். அதனைத் தொடர்ந்து இதற்காக அமைக்கப்பட்ட 21 பேர் அடங்கிய குழு மீண்டும் கூடி யாப்பத் தெடர்பான திருத்தங்களை மேற்கொள்ளும்.
வார்த்தை வார்த்தையாக அந்தக் குழு இதனை ஆராயும். அதனைத் தொடர்ந்து உருவாகின்ற யாப்பு அமைச்சரவையால் அங்கிகரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் பொது சன கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது. இதனால் எவரும் நீதி மன்றத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு செல்ல வாய்ப்பு இருக்காது. என்றாலும் அப்படிப் போவதற்கும் இதில் தடைகள் இருக்க மாட்டாது. இது யாப்புத் தொடர்பான நகர்வுகளின் நிலை.
இன்று பதவியிலுள்ள அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியில் கூட்டிணைப்பாக இருக்கின்றது. இதில் சுதந்திரக் கட்சி தரப்பில் இந்த கூட்டரசங்கத்தை விமர்சிப்போர் - ஏற்றுக் கொள்ளவதவர்கள் என்றும் ஒரு தரப்பு இருக்கின்றது. இவர்கள் ஏறக்குறைய 38 பேர் சுதந்திரக் கட்சிக்காரர்கள். இவர்களைத் தவிர ஏனைய கட்சிகளைச் சேர்ந்த மேலும் 14 பேர் பாராளுமன்றத்தில் இருக்கின்றார்கள்.
இவர்கள் எந்த ஒரு விவகாரத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் முன்னெடுத்து விமர்சித்து வருவதைப் பார்க்க முடிகின்றது. எனவே இவர்களினாலும் இந்த யாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கி இருக்கின்றது என்பது கட்டுரையாளின் மதிப்பீடு.
இப்போது இந்த நாட்டில் உள்ள சமூகங்களின் உத்தேச யாப்புத் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றது என்று சற்றுப் பார்ப்போம்.
பெரும்பான்மை சிங்கள சமூகம் உத்தேச அரசியல் யாப்பில் முக்கியமாக தேர்தல் முறையில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றது. அத்துடன் ஜனாதிhதியின் அதிகாரங்கள் மட்டுப்படத்தப்பட வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றது. அதிகாரப் பகிர்வு என்ற விடயத்தை இவர்கள் கசப்பான மருந்தாகத்தான் கருதுகின்றார்கள்.
சிறுபான்மை சமூகம் குறிப்பாக வடக்குக் கிழக்குத் தமிழ் சமூகம் தமக்கு சமஷ்டி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பாக்கின்றது அவர்களின் பிரதான எதிர்பார்ப்பாக அதுவே இருக்கின்றது. ஜனாதிபதியின் அதிகாரங்கள், தேர்தல் முறையில் மாற்றங்கள் என்பது பற்றி இவர்களுக்குப் பெரிய எதிர்பார்ப்புக்கள் கிடையாது. சுமஷ்டியை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர்கள் தங்கள் தரப்பில் தெளிவான ஆலோசனைகளை உத்தேச யாப்புக் குழுவினருக்குச் சமர்பித்திருக்கின்றார்.
முஸ்லிம்களைப் பொருத்தளவில் அவர்களைப் பிரதிநித்துவம் செய்கின்ற அரசியல் தலைமைகள் இந்த யாப்புத் தொடர்பாக நாம் அறிந்த வரை எந்த வொரு யோசனையையும் இது வரை முன்வைத்தாக தெரிய வில்லை. என்றாலும் அடுத்தவர்களுக்குக் கொடுத்தால் எமக்கும் தா என்பதுதான் அவர்களின் தலைவர்கள் பேச்சுக்களில் இருந்து தெரிய வருக்கின்றது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களும் தங்கள் தரப்பில் தெளிவான கோரிக்கைகளை யாப்புக் குழுவினர்களுக்கு சமர்ப்பித்திருக்கின்றார்கள்.
சர்வதேச சமூகமும் மற்றும் இந்தியாவும் உத்தேச யாப்பில் இலங்கையில் நிலவுகின்ற அரசியல் நெருக்கடிகளுக்கு ஏதாவது தீர்வுகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கின்றன.
பொது பல சேனா இந்த யாபுத்திருத்தம் தனிநாடு கோறுகின்ற தமிழ் தரப்பினரைத் திருத்தி செய்வதற்காக முன் னெடுக்கப்படும் ஒரு நாடகம். தனக்கு வாக்களித்த தமிழர்களைத் திருப்திப்படுத்த ஜனாதிபதி மைத்திரியும், பிரதமர் ரணிலும் முயல்கின்றார்கள், இதனை சிங்கள சமூகம் புரிந்து கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கின்றார்கள். இதற்கிடையில் சிங்கள ராவய என்ற கடும் போக்கு இனவாத அமைப்பும் பொதுபல சேனாவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதற்கான உடன்பாடொன்றை சில தினங்களுக்கு முன்னர் கண்டுள்ளது. எனவே உத்தேச யாப்பு எதிப்பு நடவடிக்கைகளில் அந்த அணிகள் ஒன்றிணைந்து செயலபடும்.
அத்துடன் இன்னும் பல இனவாத பௌத்த குருமார் இந்த யாப்பு சிங்கள மக்கள் நலன்களுக்குப் பெரும் அச்சுறுத்தல் என்று கூறி யாப்புக்கு எதிரான தமது பிரச்சாரத்தை முன்னெடுக்க தற்போது சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.
இதற்குப் புறம்பாக பல அரசியல் கட்சிகள் தங்களது இருப்பை இந்த உத்தேச யாப்பு தொல்லையாக இருக்கும் என்ற கண்னோட்டத்தில் சிந்திப்பதாகவும் பேசப்படுகின்றது. மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சிக் கூட்டமொன்றில், ஐக்கிய தேசியக் கட்சியை இந்த விகாரத்தில் எவ்வளவு தூரம் நம்ப முடியும் என்ற கேள்வியை சில உறுப்பினர்கள் எழுப்பி இருக்கின்றார்கள். ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து சில சிறுபான்மைக் கட்சிகளும் இது விடயத்தில் குழறுபடிகளை ஏற்படுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகின்து. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நடந்து கொண்டதைப் போன்று இதிலும் அவர்கள் முன்னுக்குப்பின் முறாக நடந்து கொள்ள இடமிருக்கின்றது.
இதற்கிடையில் மஹிந்த தரப்பு எதிரணி சார்பில் பிரசன்ன ரணதுங்ஹ அரசை வீழ்த்துவதற்கான காலக் கெடுவை அறிவித்திருக்கின்றார். அவர் கூறுகின்ற படி இன்னும் இரு வருடங்களில் இந்த அரசைக் கவிழ்ப்பது அவர்களது திட்டம்.
இதற்கிடையில் வருகின்ற 17ம் திகதி சமகால இலங்கை அரசியலில் தீர்க்கமான ஒரு தினமாகப் பார்க்கப்படுகின்றது. மஹிந்த தரப்பு அணி 17ம் திகதி தனது கூட்டத்தை கொழும்பு-ஹைட்பார்க் மைதானத்தில் நடத்துவதற்குத் தீர்மானித்திருக்கின்றது. இந்தக் கூட்த்திற்குத் தானும் கட்டாயம் கலந்து கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல இடங்களில் பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார்.
சுதந்திரக் கட்சியோ இந்தக் கூட்டத்திற்கு தனது கட்சியைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்று கண்டிப்பாக அறிவித்திருக்கின்றது. இது முன்னாள் ஜனாதிபதிக்கும் பொருந்தும் எனவே அவர் இதில் கலந்து கொண்டால் அவருக்கும் நாம் நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் கட்சி என்றால் கட்டுப்பபாடு வேண்டும். பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கின்றது, என்று எச்சரித்திருக்கின்றார் சுதந்திரக் கட்சிச் செயலாளர் துமிந்த திசாநாயக்க. எனவே என்ன நடக்கும் என்பதை பார்க்க வியாழக்கிழமை வரை காத்திருக்க வேண்டி இருக்கின்றது.
யாப்புக்கு எதிரான வன்முறையும் அரசுக்கு எதிரான போராட்டங்களும் ஓரiணியில் இணைவாற்கு அனேகமாக வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே உத்தேச யாப்பு பலதடைகளைக் கடந்தே தனது இலக்கை அடைய வேண்டி இருக்கின்றது.
Post a Comment