Header Ads



கூட்டு எதிர்க்கட்சியினர் ஒரு வகை விலங்குககள், ரணில் அரசியலை கைவிட வேண்டும் -


ராஜபக்ச அதிக வட்டியில் கடனை பெற்றுக்கொள்ளும் போது அமைச்சரைவையில் பூனைக்குட்டிகளை போல் இருந்த கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளமை குறித்து பேச எந்த உரிமையும் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த அனுரகுமார,

பொருளாதார வீழ்ச்சியை பற்றி பேசும் கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெட்கமில்லாத ஒரு வகை விலங்குகளை போன்றவர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் மறைக்கப்பட்டுள்ள கடன்களை கண்டறிய சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகிறார்.

எமது நாட்டு நிறுவனங்களிடம் இருந்து பெற்ற கடனை கண்டுபிடிக்க சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை எதற்கு?, அந்த நிறுவங்கள் மற்றும் அமைச்சர்கள் ஊடாக கடன் தொகையை கண்டறிய முடியும்.

பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எயார் லங்கா, இலங்கை போக்குவரத்துச் சபை, மின்சார சபை என்பன எந்தளவு கடனை பெற்றுக்கொண்டுள்ளது என்பதை கண்டறிய முடியும்.

கடந்த காலத்தில் ராஜபக்சவினர் விளையாடினர். பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், எயார் லங்கா போன்ற நிறுவனங்கள் மூலம் பெற்ற கடனை அந்த நிறுவனங்கள் பெற்ற இலாபமாக காட்டினர்.

இதன் மூலம் நாட்டின் உண்மையான கடனை மறைத்து, வருமானத்தை அதிகரித்து காட்டினர்.

இது பற்றி தனக்கு அண்மையில் தான் அறிந்து கொள்ள முடிந்தது என ரணில் விக்ரமசிங்க கூறுவாரேயானால், அவர் அரசியலை கைவிட வேண்டும் எனவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.