விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியதும், உடலில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார்
ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரம் வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி, ரஷியாவின் மிக்கேல் கோர்னியென்கோ ஆகிய 2 பேரும் 340 நாட்கள் அதாவது ஒரு வருடம் விண்வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 3–ந் தேதி சோயுஸ் விண்கலம் மூலம் கஜகஸ்தானில் பத்திரமாக தரை இறங்கினர்.
அதை தொடர்ந்து தனது உடல் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து விளக்கினார். விண்வெளியில் தங்கியிருந்த போது அங்கு புவிஈர்ப்பு சக்தி இல்லாததால் முதுகு தண்டுவடம் தற்காலிகமாக விரிவடைந்தது.
அதனால் எனது உயரம் வழக்கத்தை விட 1.5. இஞ்ச் கூடுதலானது. அதே நேரத்தில் நான் பூமிக்கு திரும்பியதும் முதுகு தண்டுவடத்தின் அளவு சுருங்கியது. மீண்டும் பழைய உயரத்தை அடைந்தேன். மேலும் பூமிக்கு வந்ததும் உடல் தசைகளில் களைப்பும், பலவீனமாக இருப்பதையும் உணர முடிகிறது.
உடலில் தோல் பகுதியை தொட்டால் ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது. கண் பார்வையிலும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லியும், அவரது சகோதரர் மார்க் கெல்லியும் இரட்டையர்கள். அவர்கள் இருவரும் ஒரே அளவு உயரம் உள்ளனர்.
ஸ்டாட் கெல்லி ஹூஸ்டன் திரும்பியதும் கட்டித் தழுவிய போது தன்னை விட அவர் கூடுதல் உயரம் இருந்ததை அறிய முடிந்தது என்றும் அவர் கூறினார். விண்வெளியில் புவிஈர்ப்பு முதுகு தண்டு வடத்துக்கும், எலும்புகளுக்கும் இடையேயான திரவம் உயர்வதால் இந்த நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.
Post a Comment