Header Ads



எந்தவொரு அச்சுறுத்தலுக்கும், முகம்கொடுக்க உஷார்நிலை - பாதுகாப்பு அமைச்சு

நாட்டின் தேசிய பாதுகாப்புதொடர்பில் எவரும் அச்சம் கொள்ளதேவையில்லைஎன்றும் எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் சவால்களுக்கும் சகல சந்தர்பங்களிலும் முகம் கொடுக்கும் வகையில் பாதுகாப்புபடையினர் உஷார் நிலையில் உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேனஹெட்டியாராச்சிதெரிவித்தார்.

இதேவேளை,கட்டுநாயக்கசர்வதேச விமானநிலையத்தின் பாதுகாப்பும் போதிய அளவு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தான் முழுமையான உத்தரவாதம் வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புஅமைச்சின் வழிகாட்டலின் கீழ் இலங்கை இராணுவத்தின் 56வது படைப்பிரின் ஒத்துழைப்புடன் வவுனியாகொக்எலியபிரதேசத்தில் படைவீரர்களுக்கென40 பேர்ச்சர்ஸ் வீதம் 80 காணிதுண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டுவரும் “நல்லிணக்கபடைவீரர் கிராமம்” தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விஷேட செய்தியாளர் மாநாடு பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சின் நிர்வாகநடவடிக்கைகளுக்கானமேலதிகசெயலாளர் சரத் சந்திரசிறிவித்தானகேயின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்தசெய்தியாளர் மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் மேலும் கருத்துதெரிவிக்கையில் :-

தேசியநல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை அடிப்படையாகக் கொண்டு அடிப்படை வசதிகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க படைவீரர் கிராமத்தில்நிர்மாணிக்கப்பட்டுள்ள 51 வீடுகளையும் உத்தியோக பூர்வமாக படை வீரர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதிமைத்திரிபாலசிறிசேனவின் தலைமையில் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதிசிங்களதமிழ் புத்தாண்டைமுன்னிட்டுநடாத்தசகலஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபாதுகாப்புச் செயலாளர் பெல்ஜியத்தின்,பிரசெல்ஸ் நகரத்தில் இடம்பெற்ற இருவேறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பில் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் சார்பில் தனது வன்மையானகண்டனத்தை தெரிவித்தார்.

சர்வதேச பயங்கரவாதகுழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளநிலையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய கடந்த டிசம்பர் மாதம் முதல் விமானநிலையத்தின் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் விமானப் படை, எயார் லைன்ஸ் நிறுவனம்,குடிவரவு, குடியகழ்வு,சு ங்கதிணைக்களங்களினதும் ஆலோசனைகள் பெறப்பட்டுஒன்றிணைந்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாதாந்தம் இது போன்றவிடயங்கள் தொடர்பில் ஆராய்ந்து குறைப்பாடுகள் இருப்பின் நிவர்த்திசெய்து கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பாககிடைக்கப் பெறும் தொலைபேசிஅழைப்புக்கள் தொடர்பிலும் புலனாய்வுதுறையினர் அவதானத்துடன் செயற்படும் அதேசமயம், விசாரணைகளையும் முன்னெடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஸாதிக் ஷிஹான் 



No comments

Powered by Blogger.