மழைவேண்டி நடாத்தப்பட்ட தொழுகைகளும், காலநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களும் - சில படிப்பினைகள்
-Inamullah Masihudeen-
"அல்லாஹ்தான், காற்றுகளை அனுப்பி, (அவற்றால்) மேகத்தை ஓட்டி, பிறகு அதைத் தான் நாடியபடி, வானத்தில் பரத்தி, பல துண்டங்களாகவும் ஆக்கி விடுகிறான்; அதன் மத்தியிலிருந்து மழை வெளியாவதை நீர் பார்க்கிறீர்; பிறகு, அவன் அதைத் தன் அடியார்களில், தான் நாடியவர் மீது வந்தடையச் செய்யும் போது, அவர்கள் மகிழ்கிறார்கள். (ஸுரத் ரூம் 30:48)
கடந்த சில வாரங்களாக இலங்கையில் நிலவிய வரட்சியான காலநிலை குறித்து அரசாங்கம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. எதிர்வரும் மே ஜூன் வரை இலங்கை மற்றும் மாலை தீவு பிரதேசங்களில் இதே கால நிலை தொடரும் என்பதற்கான வானிலை எதிர்வு கூறல்களை முன்வைத்து மக்களுக்கு பல எச்சரிக்கைகளையும் விடுத்திருந்தமை நாம்அறிவோம்.
அதேவேளை நீரேந்து பகுதிகளில் மழை வீழ்ச்சி இன்மையினால் தொடர்ந்து பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் ஒரு மணி நேரமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் முன்னறிவிப்புச் செய்தது.
இந்த நிலையில் தான் கடந்த ஞாயிறன்று (27/03/2016) மழை வேண்டி தொழுகை நடத்துவதற்கான ஏற்பாடுகளை அகில இலங்கை ஜம்மியாய்துல் உலமா நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பாடு செய்திருந்தது. அன்று மாலை நாட்டின் பல பாகங்களிலும் அருள் மழை பொழிந்தது, அல்ஹம்துலில்லாஹ்.
அதனை தொடர்ந்து அரசு இரண்டு அறிவித்தல்களை வெளியிட்டது, முதலாவது காலநிலையில் திடீர்மாற்றம் ஏற்பட்டு நாட்டின் சில பாகங்களில் மழை பெய்கின்றது, நாளை முதல் நாட்டின் பல பாகங்களிலும் மழை பொழியும் என வானிலை அறிக்கையை வெளியிட்டது.
இரண்டாவதாக நீரேந்து பகுதிகளில் போதிய அளவு மழை பெய்வதால் நீர்மின் உற்பத்தியை போதிய அளவு மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் மின்வெட்டு அறிவிப்பை வாபஸ் வாங்குதாகவும் அறிவித்தது.
கருணையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ், அவனிடம் பாவ மன்னிப்புக் கோரி உயர்த்தப்பட்ட கரங்களை வெறுமையாக திருப்பி அனுப்பவில்லை அல்ஹம்துலில்லாஹ்.
எங்கள் கண்களும் கல்புகளும் குளிர நாட்டின் பல பாகங்களிலும் அல்லாஹ்வின்அருள் மழை பொழியக் காண்கின்றோம்.. அல்லாஹு அக்பர், அவன் தனித்தவன், இணை துணையற்றவன்.
"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது." (ஸுரத்துன் நூர் 24:43)
அல்லாஹ்வின் குத்ரத்துகளை உணர்த்துகின்ற இவ்வாறான நிகழ்வுகளை நாம் சிந்தித்து எமது ஈமானை புதுப்பித்துக் கொள்ள வேண்டும், அவனது அருள் மீது நம்பிக்கை இழந்து விடாது எமது தனிப்பட்ட வாழ்விலும் பொது வாழ்விலும் எமதுஆன்மீக நம்பிக்கைகள் பிரதிபலிக்கும் வண்ணம் இதய சுத்தியோடு இறையருள் வேண்டி நாம் முன்மாதிரியாக நடந்து கொள்ளவேண்டும்.
விசுவாசிகள் தங்களுக்கு உரியவர்கள் அல்ல ஏனைய சமூகத்தினருக்கும், பறவைகளுக்கும், விலங்குகளிற்கும், தாவரங்களிற்கும், எல்லா உயிரினங்களிற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளை , கருணையின் தூதை சுமந்துள்ளவர்கள், என்பதனை எமது உயரிய ஆன்மீக பண்பாட்டு விழுமியங்கள் மூலம் நடைமுறை வியாக்கியானங்களை முன்வைக்கும் நல் அடியார்களாக இருக்க வேண்டும்.
"மேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது."
(ஸுரத் பாதிர் 35:9)
“வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.
நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.
அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, "எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக! இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!" (என்றும்;).
"எங்கள் இறைவனே! இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).”
(ஸுரத் ஆல இம்ரான் 3: 189,190,191,192,193,194)
alhamdulilla
ReplyDeleteالحمد لله ،اولا أشكرالله تعالى وثانيا مصلىن
ReplyDeleteاللهم لك الحمد ولك الشكور
ReplyDelete