Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் விழிப்பாகவே இருக்கிறது - ஹக்கீம்

-எம்.வை.அமீர் -

தற்போது நாட்டில் பேசுபொருளாகவுள்ள புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பான விடயத்தில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகக் காத்திரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. சிலரால் கூறப்படுவது போன்று மௌனம்காக்கவில்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நகர திட்டமிடல் நீர் விநியோக வடிகாலமைப்பு அமைச்சருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகரசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழுவின் தலைவருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸின் தலைமையில் இடம்பெற்ற இடைக்கால மத்திய குழுவின் விசேட கூட்டம் சாய்ந்தமருது ஹெல்த் சென்டரில் 2016-03-05 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர்  ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், முன்னாள் பாராளமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன் மற்றும் கல்முனை மாநகரசபையின் பிரதி முதல்வர் ஏ.எல்.அப்துல் மஜீத் உள்ளிட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய றவூப் ஹக்கீம், புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பல்வேறு உயர்மட்டக்குழுக்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் இதில் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் யோசனைகளை உள்ளடக்கியவாறு ஆவணங்களும் தயார்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறவுள்ள கட்சியின் தேசிய மாநாடு தொடர்பில் கருத்துவெளியிட்ட அமைச்சர், பாலமுனையில் மிக விமர்சையாக இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொள்ளவுள்ளதாகவும், முஸ்லிம் காங்கிரஸின் அபிமானிகள் அனைவரும் அணியணியாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கல்முனை நகர அபிவிருத்தி தொடர்பாக கூறும்போது இப்பிராந்திய மக்களுக்கு வாக்களித்தவாறு கல்முனை அபிவிருத்திசெய்யப்படும் என்றும், அதற்க்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்முனை நகர அபிவிருத்தியின் ஆரம்பகட்ட பணிகள் சாய்ந்தமருதில் இருந்தே ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

குறித்த கல்முனை நகர அபிவிருத்தி பணிகளை செயட்படுத்துவதற்காக கல்முனையில் விரைவில் அலுவலகம் ஒன்றை திறக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

2 comments:

  1. 18 வது அரசியல் அமைப்பு மாற்றத்துக்கு கை தூக்கி ஆதரவு வழங்கியதும் நீங்கள்தான், ஆட்சி மாற்றத்தின் பின் நாம் அன்று பிழை செய்து விட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என ஒப்பாரி வைத்ததும் நீங்கள்தான்.
    இன்று சாமானிய மக்கள் வாய் திறக்கும் வரை மௌனமாக இருந்து விட்டு , நாம் தூங்க வில்லை முழித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என கொட்டாவி விடுவதும் நீங்கள்தான் .
    கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தமது கட்ச்சியின் உயர்பீடம் உள்ளவர்களின் சுயநலன்களுக்காக தாரை வார்த்து விட்டு , இறுதி நேரத்தி இரண்டு வார்த்தைகள் மூலம் அறிக்கை விட்டு விட்டு அமைதியாகலாம் என தப்பித்துக் கொள்ள நினைக்கின்றீர்களா?

    ReplyDelete
  2. Konjam.urakkam.varaellaya.sir.

    ReplyDelete

Powered by Blogger.