"புலிகள் எப்போது தலைதூக்குவர் என்ற, எதிர்பார்ப்பிலேயே ராஜபக்ச குடும்பம் வாழ்கிறது"
தமிழீழ விடுதலைப் புலிகள் எப்போது மீண்டும் தலைதூக்குவார்கள் என்ற எதிர்பாரப்பிலேயே ராஜபக்ச குடும்பம் வாழ்வதாக சர்வதேச முதலீட்டு அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் கூறினார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, அதற்கு ராஜபக்ச குடும்பம் உதவுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது அமைச்சர் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை வைத்தே நாமல் ராஜபக்சவும் அவரது குடும்பத்தினராகிய ராஜபக்சக்களும் அரசியல் செய்து வருவதாக தெரிவித்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்கும் என்ற கனவில் அவர்கள் வாழ்வதாகவும் குறிப்பிட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலைதூக்க இடமில்லை என்பதில் ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் உறுதியாக உள்ளனர் என்றும் இதன்போது அமைச்சர் சுஜீவ சேனசிங்க மேலும் கூறினார்.
Post a Comment