டொனால்டு டிரம்ப் அமெரிக்கா, ஜனாதிபதியானால் எப்படியிருக்கும்..?
குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்றால் அமெரிக்காவில் 6 அதிரடி மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு ஒபாமா கொண்டு வந்த சில திட்டங்களை அவர் உடனடியாக ரத்து செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
1. துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை
அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக தற்போதையை ஜனாதிபதியான ஒபாமா கடுமையான சட்டங்களை கொண்டு வந்துள்ளார். இதன் மூலம், பொதுமக்கள் துப்பாக்கி வைத்துக்கொள்ள கடுமையான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
ஆனால், டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானால், ஒபாமா கொண்டு வந்த இந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டு பொதுமக்கள் எளிதாக துப்பாக்கிகளை வைத்துக்கொள்ள வழி செய்வார்.
‘அமெரிக்க சட்டங்களை பின்பற்றும் குடிமக்கள் தாராளமாக துப்பாக்கிகளை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்வேன்’ என டொனால்டு டிரம்ப் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார்.
2. குடியேற்றம்
அமெரிக்காவில் குடியேற முயற்சிக்கும் அனைத்து இஸ்லாமியர்களையும் தடுக்க டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டுவார். மெக்சிகோ எல்லையில் சுவர்களை எழுப்புவதுடன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள 11 மில்லியன் புலம்பெயர்ந்தவர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவார்.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள அரசாங்கத்திற்கு 600 பில்லியன் டொலர் செலவும், 20 வருடக்கால அவகாசமும் ஆகும்.
3. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை
அமெரிக்காவில் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். இதில் ஒரு கட்டமாக, Guantanamo Bay சிறைச்சாலையை திறந்து வைப்பதுடன், அதிக எண்ணிக்கையிலான குற்றவாளிகளை இங்கு சிறை வைக்கப்படுவார்கள்.
இந்த சிறைச்சாலையை பராமரிக்க மாதத்திற்கு 40 மில்லியன் செலவாகும் என்று கூறப்பட்டாலும், இதனை 3 மில்லியன் செலவில் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.
4. சுகாதார துறை
தற்போதைய ஜனாதிபதியான ஒபாமா கொண்டு வந்த ‘ஒபாமா மருத்துவ சிகிச்சை’ மூலம் மில்லியன் கணக்கிலான பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும் இந்த திட்டத்தை ரத்து செய்துவிட்டு சுகாதார துறையில் புதிய திட்டங்களை கொண்டு வர முயற்சி மேற்கொள்வார்.
5. வெளிநாட்டு கொள்கையில் மாற்றம்
டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியானால் பல நாடுகளுடனான உறவுகள் பாதிப்பிற்கு உள்ளாகும். குறிப்பாக, இரான் நாட்டுடன் அணு ஆய்த கொள்கை உடனடியாக ரத்து செய்யப்படும்.
மேலும், சிரியா விவகாரத்தில் ரஷ்யா ஜனாதிபதியான விளாடிமிர் புடினுக்கு ஆதரவு அளிப்பதுடன், அமெரிக்காவின் எதிரிகளை வீழ்த்துவார்.
6. பொருளாதாரத்தை உயர்த்துவது
டொனால்டு டிரம்ப் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் என்பதால், அமெரிக்காவின் நிதி நிலையை நன்கு உணர்ந்துள்ளார். டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவானால், அமெரிக்காவின் பொருளாதாரம் மேலும் வளர்ச்சி அடையும் என பெரும்பாலான மக்கள் நம்புகின்றனர்.
குறிப்பாக, சுமார் 75 மில்லியன் பொதுமக்கள் மீதான வரி விதிப்புகளை ரத்து செய்வது, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு சரக்குகள் மீது அதிக வரிகளை செலுத்தி நாட்டிற்கு வருமானத்தை பெருக்குவது உள்ளிட்ட மாற்றங்களை டொனால்டு டிரம்ப் கொண்டு வருவார் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அப்படியே மத்தியகிழக்கில் அரபுநாடுகளில் பணிபுரியும் அமெரிக்கர்களையும் மீட்டு தாய்நாட்டிற்கே அழைத்துசெல்வாரா?
ReplyDelete