Header Ads



அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற மைத்திரி


கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் அமெரிக்கப் போர்க்கப்பலுக்குச் சென்ற  மைத்திரிபால சிறிசேன அதனைச் சுற்றிப் பார்வையிட்டுள்ளார்.

அமெரிக்கக் கடற்படையின் ஏழாவது கப்பற் படையணியின் கட்டளைக் கப்பலான யுஎஸ்எஸ் புளூரிட்ஜ், நேற்றுமுன்தினம் கொழும்புத் துறைமுகத்துக்கு வந்தது.

இந்தக் கப்பலுக்கு இன்று -28-  மதியம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தனவுடன் சென்று பார்வையிட்டார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்பும், இதன்போது உடனிருந்தார்.
 அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற்படையணியின் கட்டளை அதிகாரி வைஸ் அடி்மிரல் ஓகொயின், யுஎஸ்எஸ் புளூரிட்ஜ் கப்பலின் கட்டளை அதிகாரி கப்டன் கைல் பி ஹிக்கின்ஸ் ஆகியோர் வரவேற்று, கப்பலைச் சுற்றிக் காண்பித்தனர். அத்துடன் அமெரிக்க கடற்படை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றிலும் பங்கேற்றிருந்தார்.




No comments

Powered by Blogger.