பசில் ராஜபக்சவுக்கு பிணை, வெளிநாடு செல்லத் தடை
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
திவிநெகும திட்டத்தின் நிதி மோசடி செய்ததாக பசில் ராஜபக்ச உள்ளிட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
பசில் ராஜபக்ஸ, திவிநெகும திட்டத்தின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக்க, திவிநெகும அபிவிருத்திப் பணிப்பாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 22ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் பத்மினி ரணவக்க அறிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ஸ உள்ளிட்டவர்களுக்கு தலா ஐந்து லட்ச ரூபா அடிப்படையில் சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ள நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Post a Comment