ஹசன் அலி, விளக்கமளிக்க வேண்டும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, அந்தக் கட்சியின் 19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்ளாமை குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் கூறினார்.
இன்றைய மாநாட்டில் சுகயீனம் காரணமாகவே எம்.ரி.ஹசன் அலி, கலந்து கொண்டிருக்கவில்லை என்று கூறிய சபீக் ரஜாப்தீன், எனினும் அவர் சரியான விளக்கமளிக்க தவரும் பட்சத்தில் அவருக்கு எதிராக கட்சியின் உயர்மட்டம் கூடி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தேசிய மாநாட்டில் எம்.ரி.ஹசன் அலி கலந்து கொள்ளாமைக்கான காரணம் குறித்து அந்தக்கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீனிடம் அத தெரண செய்திப் பிரிவு வினவியபோதே அவர் இவ்வாறு கூறி இருந்தார்.
அதேநேரம் இந்தவிடயம் குறித்து எதிர்வரும் தினங்களில் கட்சியின் உயர்பீடம் கூடி கலந்தாலோசிக்க உள்ளதாகவும் கூறினார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை காலை அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை பொது மைதானத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன், அமைச்சர்களான சரத் பொன்சேகா, தயா கமகே, மனோ கணேசன் உட்பட அரசியல் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் பலரும் அதிதிகளாக கலந்து கொண்ட இம்மாநாட்டில், அக்கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி பங்குபற்றாமல் பகிஷ்கரிப்பு செய்திருந்தார்.
இந்தவிடயம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி.ஹசன் அலியிடம் வினவுவதற்கு அத தெரண செய்திப்பிரிவு பல தடவைகள் முயன்றபோதும் அது பலனளிக்கவில்லை.
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தனக்கு வழங்கப்படாமையினால் அவர் கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டு, அதிருப்தியடைந்த நிலையில் இருந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 19ஆவது தேசிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரணத்தை அவரே சொல்லிட்டு விளக்கம் கேட்டிருக்கிறார். எல்லாமே மக்களை மடையர்களாக்கும் கைங்கரியமே.
ReplyDeleteநான் நினைக்கவில்லை ஹசன் அலி இப்படி செய்வார் என்று?
ReplyDeleteHassan Ali was a harcore supporter of Muslim Congress and joined the party for the love he had towards the community.
ReplyDeleteResigned his job in Middle East and came to Lanka to join the party was formed
What was Shafeek Rajabdeen at that time
May be would have been a unp supporter
Its very disheartening to read a such a unpalatable comment of him
துரதிஷ்டமாக நடக்கும் இத்தகைய நிகழ்வுகள் சீர் செய்ய முடியாத அளவுக்கு பெரும்பாலும் வியாபார இலக்கை அல்லது குறுகிய சிந்தனை கொண்ட பொறுப்பில்லாத ஊடகங்களால் சீரழிக்கப் படுகின்றன
ReplyDeleteமலையை பார்த்து நாய் விளக்கம் கேட்குது!!! இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌக்யமே!!!
ReplyDeleteதாஎதிர்பார்த்த பதவிகிடைக்கவில்லை என்பதற்காக மாநாட்டில் கலந்து கொள்ள விருப்பம் இல்லாமல் புறக்கணித்துவிட்டார்,இதிலிருந்து தெளிவாக விளங்கியது இவருடைய சுயநலனுக்காகத்தான் கட்சியில் தியாகப்பேருடன் ஒட்டிக்கொண்டு இருந்தார் என்பது இவர்களிடம் குர்ஆன் ஸுன்னா வழிபாடும் இறையச்சமும் இருந்தால் இப்பொழுது காரணமாக சொன்ன நோய் ஒரு பொருட்டாக இருந்திருக்கமாட்டாது மு.கா ஆரம்பத்தில் இருந்து வந்தவர்கள்தான் பதவிகளை வகிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை யாரை எந்தப்பதவிக்கு நியமித்தாலும் அவர்களுக்கு நாம் உதவி ஒத்தாசையோடு இருக்கும் வரை அந்தப் பதவிக்கு நாமும் சொந்தக்காரர்கள்தான் இதைதான் இஸ்லாம் வரவேற்கிறது
ReplyDeleteபா.ள உறுப்பினர் பதவி கிடைக்காமை முழுக்காரணமல்ல, அவருக்குரிய பதவிக்குரிய அதிகாரங்கள் சதி காரணமாக பிடுங்கப்பட்டமையே....
ReplyDelete