பூர்வீக இடங்களில் முஸ்லிம்களை மீள்குடியேற்றாவிட்டால், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது - அஸ்வர்
பூர்வீக இடங்களில் முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யாவிட்டால் வடக்கு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது. தமிழர்கள் பிரச்சினைகளுக்கு அக்கறை செலுத்தும் சர்வதேசம் முஸ்லிம்கள் விடயத்தில் பராமுகமாக செயற்படுவதாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் அஸ்வர் தெரிவித்தார்.
ஒரே நாடு என்ற கோட்பாட்டிற்குள் வாழ்வதே பெரும்பான்மை முஸ்லிம்களின் அபிப்ராயமாகும். எக்காரணம் கொண்டும் இலங்கையில் தனி நாடு கோரும் நோக்கம் எம்மிடம் கிடையாது. தனி அலகு கோரிக்கை பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிபலிப்பல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
யூ.எல்.எம் பாருக் மன்றத்தின் 11 ஆவது வருட பூர்த்தி விழா நேற்று முன்னாள் அமைச்சர் யூ.எல்.எம் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இலங்கையில் முஸ்லிம்கள் அனைத்து இனத்தவர்களுடனும் ஒற்றுமையாக வாழுந்து வருகின்றனர். யூ.எல்.எம் பாருக் இன ஐக்கியத்திற்கு சிறந்த முன்னூராணமாகும். சிங்களவர்கள் பெரும்பான்மையை கொண்ட தொகுதியில் ஒரு முஸ்லிம் இனத்தவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுவது பாராட்டதக்க விடயமாகும். ஐக்கிய தேசியக் கட்சியினால் 28 பேரிற்கு மத்தியில் யூ.எல்.எம் பாருக் ருவன்வெல்ல தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டமை ஒரு சாதனை நிகழ்வாகும்.
இந்நிலையில் தற்போது அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. இதன்போது முஸ்லிம்களுக்கு தனி அலகு கோருகின்றனர். இது பெரும்பான்மை முஸ்லிம்களின் பிரதிபலிப்பல்ல. நாம் ஒருபோதும் தனிநாடு கோரப்போவதில்லை. இலங்கையில் காணப்படும் சுதந்திரம் உலகில் எந்தவொரு நாட்டிலும் கிடையாது. ஒரே நாடு என்ற கோட்பாட்டின் கீழ் வாழ்வதே எமது நோக்கமாகும். அதனை முஸ்லிம் தலைவர்கள் கடந்த காலங்களில் முன்னெடுத்தனர்.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செய்ட் அல் ஹூசைன் இலங்கை வருகை தந்தபோது முஸ்லிம்கள் தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை. தமிழர்களுக்கு வழங்கும் முக்கியத்துவம் சர்வதேசம் முஸ்லிம்களுக்கு வழங்கவில்லை. இது பெரும் ஏமாற்றமாகும். இந்நிலையில் பூர்விக இடங்களிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யவேண்டும். முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்யாவிட்டால் வடக்கு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என்றார்.
மேலும் இந்நிகழ்வில், முன்னாள் வர்த்தக அமைச்சர் ஏ.ஆர்.மன்ஸூர், கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சன்ஜே பெரேரா மற்றும் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் நிஹால் பாரூக் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
Kilampirhthar
ReplyDeleteஆடு நனையுதுன்னு ஓநாய் அழுத கதை
ReplyDeleteadmin, why are u updating this person's news?
ReplyDelete