கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன், உயிருடன் மீண்டு வந்தான்
ஜேர்மனி நாட்டில் குடியேறுவதற்காக துருக்கியிலிருந்து புறப்பட்டபோது கடலில் மூழ்கி உயிரிழந்ததாக கருதப்பட்ட சிறுவன் ஒருவன் ஒரு வருடத்திற்கு பிறகு உயிருடன் பெற்றோர்களிடம் மீண்டும் இணைந்த அதிசய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
துருக்கி நாட்டை சேர்ந்த இப்ராகிம் என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் ஜேர்மனி நாட்டில் குடியேற கடந்தாண்டு தொடக்கத்தில் புறப்பட்டுள்ளார்.
துருக்கி கடற்கரையிலிருந்து படகுகள் மூலம் புறப்பட்டபோது, சில கி.மீ தொலைவிற்கு பிறகு அவர்கள் சென்ற படகு கடலில் மூழ்கியுள்ளது.
உயிர் பிழைத்த பெற்றோர் தனது 10 வயதான மகதி ரபானியை தேடியுள்ளனர். ஆனால், சிறுவன் கண்டுபிடிக்கப்படவில்லை.
மூழ்கிய படகில் தனது ஆசை மகனும் இறந்துவிட்டான் என வேதனை அடைந்த பெற்றோர் பெரும் துயரத்துடன் துருக்கி நாட்டிற்கு திரும்ப சென்றுள்ளனர்.
சில நாட்களுக்கு பிறகு, இப்ராகிம் தனது குடும்பத்தினருடன் ஜேர்மனிக்கு புறப்பட்டு அங்குள்ள Lower Saxony மாகாணத்தில் குடியேறியுள்ளனர்.
இந்நிலையில், ஜேர்மனியை சேர்ந்த செஞ்சிலுவை சங்கம் சுவிட்சர்லாந்து நாட்டில் அகதிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அப்போது, பேர்ன் நகரில் இறந்ததாக கருதப்பட்ட 10 வயது சிறுவனான மகதி ரபானி ஒரு ஆப்கானிஸ்தான் நாட்டு குடும்பத்தினருடன் வசித்து வந்ததை கண்டுபிடித்தனர்.
இதனை உடனடியாக மகதியின் பெற்றோருக்கு தெரிவித்தவுடன் அவர்கள் மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்று ஆனந்த கண்ணீர் வடித்துள்ளனர்.
சிறுவனை ஜேர்மனி நாட்டுக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் முடிந்த நிலையில், நேற்று ஹேனோவர் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தான்.
இறந்ததாக கருதப்பட்ட தனது மகன் உயிருடன் திரும்ப கிடைத்ததை கண்டு, மகனை வாரி அணைத்து பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியே இப்ராகிம், ‘எங்களது மகன் திரும்ப கிடைத்த இந்த நிகழ்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை. செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளுக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
திரும்ப கிடைத்த தங்களது மகனை உடனடியாக பள்ளியில் சேர்க்க உள்ளதாக பெற்றோர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.
Alhamthulillah
ReplyDeleteSubhanella!
ReplyDelete