வீட்டுத்திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பியுங்கள் - மௌலவி சுபியான்
யாழ் முஸ்லீம்கள் வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான (65000) அறுபத்தையாயிரம் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் அறிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான (65000) அறுபத்தையாயிரம் வீட்டுத்திட்டம் நடைபெறவுள்ளது.
யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டு தங்களுடைய வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாண மக்களுக்கான அறுபத்தையாயிரம் (65000) வீட்டுத்திட்டத்தை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
இதன்படி தங்களுடைய சொந்த இடத்தில் காணியுள்ளவர்களுக்கு வீடுகளுக்குரிய பயனாளிகள் தெரிவிற்கான முன்னுரிமை விதிமுறைகளின் கீழ் வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
இதற்கான விண்ணப்பத்திற்கான இறுதி திகதியாக 30.03.2016 என அமைச்சு அறிவித்துள்ளது.
இவ் வீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பப்படிவம் தேவையானவர்கள் 83 நாவலர் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மக்கள் பணிமனையில் அலுவலக நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
இப் படிவத்தை பூர்த்தி செய்ததன் பின்னர் இப் படிவத்தில் உங்கள் பகுதி கிராம உத்தியோகத்தர் பிரதேச செயலாளர் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரின் கையொப்பமும் பெறப்படுதல் வேண்டும் என மக்கள் பணிமனைத் தலைவர் மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.
Before hand over the application take photo copy of the application for your future reffarance.
ReplyDelete