ஆதிவாசிகள் - பொலிஸார் மோதல் - பிபிலயில் சம்பவம்
பொலிஸார் ஆதிவாசிகளுடனும் முரண்பட்டு தாக்குதலில் ஈடுபட்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று -23- இடம்பெற்றுள்ளது.
பிபில-ரத்துகல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆதிவாசிகளின் தலைவரின் இல்லத்தில் நேற்றைய தினம் விருந்து உபசாரம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இதன் போது இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்று கைகலப்பாக மாறி இறுதியில் தாக்குதலில் முடிவடைந்துள்ளது.
குறித்த இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவரும், ஆதிவாசிகளின் தலைவரின் மனைவியும், குழந்தை ஒன்றும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பிரதேசத்தில் சூதாட்டம் இடம்பெறுவதாக 119 என்ற அவசர இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த இடத்திற்கு பொலிஸார் சென்ற போது ஆதிவாசிகள் பொலிஸாரை துரத்தி சென்று தாக்கியதாகவும் இதன்போது காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் தனது குழந்தையின் பிறந்தநாள் வைபவம் இடம்பெற்றதாகவும் இதில கலந்து கொள்வதற்காக 40 ஆதிவாசிகள் தமது இல்லத்திற்கு வருகை தந்ததாகவும் இதன்போது எமது இல்லத்திற்கு வருகை தந்த ரத்மலகா-எல்ல பொலிஸார் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு எம்மீது தாக்குதல் நடத்தியதாக ஆதிவாசிகளின் தலைவர் சுதாவன்னில எத்தோ தெரிவித்துள்ளார்.
கஸினோக்கு அனுமதி கொடுத்து விட்டு ஆதிவாசிய போய் பிடிக்கும் நல்லாட்ச்சி
ReplyDelete