Header Ads



மனிதர்களை மிருகங்களாக்கும், "பில்கேட்ஸ்"

உலகின் தலைசிறந்த பணக்காரர்களில் (பில் கேட்ஸ்) ஒருவரது நிறுவனம் இந்திய சிறுமிகள் ஆயிரக்கணக்கானோரை பரிசோதனை மிருகங்களாக்கி வரும் சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேம்பட்ட மருத்துவ வசதிகளை செய்து தருவதாக கூறி இந்தியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து பல சேவைகளை செய்து வரும் தொண்டு அமைப்பு இது.

இந்த அமைப்பின் வாயிலாக போதுமான மருத்துவ வசதிகள் சென்று சேராத பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் மருத்துவ சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன.

இத்தொண்டு நிறுவனத்தின் தலைவராகவும், கணினி மூலம் தாம் ஈட்டிய பெரும் சம்பாத்தியத்தை ஏழைகளுக்கு பகிர்ந்தளித்துள்ளவருமாக விளங்குபவர், உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் மற்றும் அவர் மனைவியார் பிலிண்டா.

இவரது தொண்டு அமைப்பின் உண்மையான குறிக்கோள் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு காலகட்டங்களில் வெளிவரத்துவங்கியுள்ளது.

ஆந்திரா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதன் முறையாக இங்குள்ள 16,000 சிறுமியருக்கு இந்த மருந்து வழங்கியுள்ளனர்.

உடல் நலனுக்கு உகந்த மருந்து என கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த மருந்தால், பல சிறுமியரின் உடல் நிலையில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மருந்தின் பக்கவிளைவால் கம்மம் பகுதியில் மட்டும் 5 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேப்போன்று குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் பழங்குடியின சிறுமியர் 14,000 பேருக்கு இந்த மருந்து வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சந்தேகமடைந்த இந்திய தொண்டு நிறுவனம் ஒன்று கம்மம் பகுதியில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது அதிர்ச்சிகரமான பல உண்மைகள் வெளி வந்துள்ளன.

கம்மம் பகுதியில் நூற்றுக்கணக்கான சிறுமியர் கடுமையான உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்துள்ளனர்.

பில்கேட்ஸ் தனது தொண்டு அமைப்பு வழியாக கர்ப்பப்பை புற்று நோய்க்கான மருந்தை சோதனை செய்யும் மிருகங்களாக 30,000 இந்திய சிறுமியரை பயன்படுத்தியுள்ளது,

பெயர் குறிப்பிடாத அந்த தொண்டு நிறுவனத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பில்லியன் கணக்கில் டொலர் புழங்குவதால் இந்த விவகாரம் வெளியே வராதவாறு அதிகாரிகளின் நடவடிக்கை உள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.