ரஞ்சன் குறித்து முறைப்பாடு - ரணிலிடம் வாங்கிக்கட்டிய அகிலவிராஜ்
-Gtn-
குளியாபிட்டி சம்பவத்தை கையாண்ட விதத்திற்காகவும், தெரிவித்த கருத்துக்களிற்காகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்தை கடுமையாக கண்டித்துள்ளார்.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
கல்வியமைச்சர் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க எயிட்ஸ்நோய் வதந்தியினால் பாதிக்கப்பட்ட சிறுவனிற்கு வீட்டிற்கு சென்றமை குறித்து பிரதமரிடம் முறையிட்டிருந்தார், குளியாப்பிட்டி சென்றதன் மூலம் பிரதியமைச்சர் அந்த விடயத்தை மேலும் குழப்பகரமானதாக்கிவிட்டார் எனவும் கல்வியமைச்சர் தெரிவித்திருந்தார்,
எனினும் அவரின் இந்த குற்றச்சாட்டை ஏற்க மறுத்த பிரதமர், நிலைமை கையை மீறி செல்வதற்கு முன்னர் அதனை கட்டுப்படுத்தாதமைக்கும், அமைச்சர் வெளியிட்ட கருத்துக்களிற்கும் அவரை கடுமையாக கண்டித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே பிரதியமைச்சர் குளியாப்பிட்டி சிறுவனின் வீட்டிற்குசென்றதாகவும், இதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரை பாராட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன,
Post a Comment