தயவுசெய்து தேசியப்பட்டியலுடன் தொடர்புபடுத்தி, என்னை விமர்சிக்காதீர்கள் - வினயமாக வேண்டும் ஹசன் அலி
தான் தேசியப்பட்டியல் பதவி கேட்டு கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாக முன்னெடுக்கப்பட்டு வரும் பிரசாரங்கள் பொய்யானவை எனவும் அவற்றை நம்ப வேண்டாம் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைமைக்கும் தனக்குமிடையில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த சில நாட்களாக நான் தேசியப்பட்டில் உறுப்பினர் பதவி கேட்டு கட்சிக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், நான் பதவி ஆசை பிடித்து அலைந்து திரிவதாகவும் சித்திரிக்கும் முயற்சிகள் பல ஊடகங்கள் ஊடாக ஒரு சாராரால் முடுக்கிவிடப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
திட்டமிட்டு ஒரு சாராரால் கட்டவிழ்த்துவிடப்படும் இவ்வாறான வதந்திகளை எவரும் நம்ப வேண்டாம் என வேண்டிக் கொள்கிறேன். சென்ற ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே என்னை இம்முறை பாராளுமன்றத்தில் ஒரு உறுப்பினராக பிரவேசிக்கவிடக்கூடாது என்ற ஒரு திட்டமிடப்பட்ட சதிவலை என்மீது வீசப்பட்டதனை, பின்னர் தொடர்ந்த சம்பவங்களைக் கொண்டு என்னால் அனுமானிக்க முடிந்தது.
எனவே, நான் இந்த தேசியப்பட்டியல் விடயத்தில் இருந்து அப்போதே வேதனையுடன் விடைபெற்றுக் கொண்டேன். ஒருபோதும் தேசியப்பட்டியல் பதவியினை நான் நாடப்போவதில்லை என்பதனை ஆணித்தரமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலில் நானும் தலைவரும் தவிசாளரும் மூன்று மாவட்டங்களில் தலைமை வேட்பாளர்களாக களமிறங்கியபோது அத்தேர்தலில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகள், வேட்பாளர்களைவிட அதிகூடிய விருப்புவாக்கினை நான் பெற்றிருந்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அதற்குப் பிறகு மீண்டும் ஒருதேர்தலில் மக்கள் முன் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு மறுக்கப்பட்டதுடன் தேசியப்பட்டியலினுள் நான் தள்ளப்பட்டு வந்தேன் என்பதை இந்த இடத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
பின்னர் கட்சியிலிருந்தும் என்னை கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அரசியல் உச்சபீடக் கூட்டத்தில் தூக்கி வீசுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளையும் நான் விளங்கிக்கொள்ள முடியாத ஞானசூனியமானவன் அல்ல.
எனது பதவிகள் பறிக்கப்படுவதனை தட்டிக்கேட்ட போதெல்லாம் நியாயம் வழங்காது தேசியப்பட்டியல் சாயம் பூசப்பட்டு தற்போது அவமானப்படுத்தப்பட்டு வருகின்றேன்.
தேர்தலில் போட்டியிட எனக்கு இடம் தந்திருந்தால் நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு விடுவேன் என்ற காரணத்தால் என்னை தேசியப் பட்டியலில் முதலாவதாக பெயர் குறித்து அனுப்பிவிட்டு பின்னர் தந்திரமாக காலை வாரிவிட்டவர்களால் தான் எனது அரசியல் வாழ்வு இன்று களங்கப்படுத்தப்படுகிறது.
எனினும் நான் கட்சிப் போராளிகளால் தோற்கடிக்கப்படவில்லை என்பது மன நிறைவைத் தருகின்றது. என்மீது பற்றும் பாசமும் கொண்டு அடிக்கடி கரிசனையுடன் ஆறுதல் கூறிவரும் அஷ்ரபின் தம்பிமார்களுக்கும் தங்கைமார்களுக்கும் தோழர்களுக்கும் நன்றிகள்.
தயவு செய்து இனிமேலாவது தேசியப்பட்டியலுடன் தொடர்புபடுத்தி என்னை விமர்சிக்க வேண்டாம் என வினயமாக வேண்டிக் கொள்கிறேன்.
இதெல்லாம் யாருடைய சூழ்ச்சியென்று துள்ளியமாகத் தெரியும் அவருக்கும் இதே நிலமை வரும்.கவலையடைய வேண்டாம்.
ReplyDeleteஅன்பிற்குரிய செயலாளர் அவர்களே...........
ReplyDeleteபிர்அவ்ன்கள் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு வடிவத்திலும் தோற்றம் பெற்று அழிவுகளைத் தந்து கொன்டுதான் இருப்பார்கள்.
இந்த ற.ஹ மும் அப்படியான ஒரு வடிவம்தான். இவனால்தான் இன்று இலங்கை முஸ்லீம்களுக்கு இப்படியான ஒரு இழிநிலை ஏற்பட்டுள்ளது. அநியாயங்களைத் தட்டிக் கேட்கும் திராணியை இழந்து எம்மை அநாதரவான நிலைக்குக் கொன்டு வந்திருக்கின்ற பெருமை இந்த ற.ஹ இற்கே சேரும்.
இனி ஒரு உருப்படியான அறிக்கையைக்கூட தயாரிக்க வக்கில்லாத நிலைக்குத்தான் SLMC யை இந்த ற.ஹ கொன்டு செல்கின்றான் - உங்களை வௌியேற்றிவிட்டு..........
இழப்பு உங்களுக்கு நேரடியாக............... பாதிப்பு மொத்தத்தில் இலங்கை முஸ்லீம்களுக்கே............... புரிந்து கொள்ளுமா இதனை இந்தப்பெயர் தாங்கி SLMC உயர்பீடம் ............
ஆமாம்,நிச்சயம் சத்தியம் வெல்லும்
ReplyDelete