Header Ads



"தலைவன் ஹக்கீம், என்னைக் கொன்றுவிட்டான்"

-மூத்த ஊடகவிலாளர் மீரா .எஸ்.இஸ்ஸடீன்-

தலைவர் ஹக்கீம் என்னைக் கொன்றுவிட்டார். கட்சிக்காக நான் செய்தவைகளைக் கொச்சைப்படுத்தி என்னைக் கொன்றுவிட்டார்.22வருட மு.கா.அரசியலில் 16வருடங்களை அக்கரைப்பற்று மண்ணில் போராட்டத்தை விதைத்தவன்.அமைச்சர் அதாஉல்லாவின் உறவுகளுக்கப்பால் அரசியலுக்கு என்னை அர்ப்பணித்தவன்.

வந்தவன்,வழிப்போக்கன் எல்லாம் இப்போ என்னை விஞ்சியவன்கள்.
தலைவா!

உன்னோடுள்ள உறவை எங்கிருந்து ஆரம்பிப்பது என்று எண்ணினேன்.1998களில் வயம்ப எலக்க்ஷன் காலத்தில் புத்தளத்தில் இல்யாஸ் எம்.பியின் வீட்டில் நீயும், நானும்,பொத்துவில் அஸிஸூம், வை.எல்.எஸ்ஸூம் தங்கியிருந்த வேளை அதன் பின் பெருந் தலைவர் வந்து சகர் செய்தது ஞாபகமிருக்கிறதா?

இதில் தொடங்கி 2015 டிசம்பர் மாதம் 25ஆம் திகதி எனது தலைமையில் நிந்தவூரில் ஊடகவியலாளர்கள் 24பேர் கௌரவிப்புக்கு அந்தூரியம் மாலை போட்டு அகமகிழ்ந்து வரவேற்று விருந்து வைத்து வழி அனுப்பி வைத்தவன்.
இவ்வாறான என்னையா நீ கொல்கின்றாய்.ஏன் என்னை கொன்றாய். நான் என்ன செய்தேன் அதையாவது சொல்.என் மீது காழ்ப்புணரச்சி கொண்டோரின் கேப்பா புத்திக் கதையைக் கேட்டு ஏன் இந்தப் போராளியைக் கொன்றாய்.காரணம் இல்லாத பழிகளைப் போட்டு என் கட்சிப் பணிகளைக் கொச்சைப்படுத்தி விடாதே.

தலைவா!
உன் அதிகார மமதைக்கு தரப்பட்ட பொன் வாளால் என் இதயத்தைக் கீறி கிழத்து சின்னா பின்னப்படுத்தி விட்டாயே என்ன கொடுமையடா?
தலைவா!

உன் அதிகாரம் நெறிகெட்டுப் போய் என் பிள்ளைகளையும் பிஞ்சு மொட்டுகளையும் பிரித்து விட்டாய். இழை துணை பிணையும் நந்தவனத்துக்கு தீ மூட்டி விட்டாய்.
நான் என்ன செய்தேன் என்பதை மீண்டும் கேட்கின்றேன்.ஒரு தரம் சொல்லு.
தலைவா!

மழலை மொழி பேசும் என் பேரன் தந்தையோடு அகமகிழ்ந்து உறவாடுவதைப் பொறுக்க முடியாமற் தடுப்பதற்காகவா என் மருமகன் சஞ்சீரை மொனராகலைக்கு அனுப்பினாய். கற்றோர் மற்றோர் கவி முடிப்போர் கலை தன்னில் சந்தர்ப்பம் கிடைத்தால் வலி| என்றால் என்னவென்றாவது உன் பொய் முகத்தைக் காட்டு 42 வருட கால மூத்த ஊடகவியலாளனின் குடும்பத்தின் மீது பழி தீர்ப்பதன் மூலம் நான் ஒரு பொன்சேகா அல்ல.

உனக்கு அதிகாரத்தையும் சொகுசான வாழ்க்கையையும் வாங்கித் தருவதற்கு நான் இக்கட்சிக்காக சிந்திய இரத்தத்துக்கும் துப்பாக்கி வேட்டுகளுக்கும், குண்டு வீச்சுக்கும் நீ செய்கின்ற கைமாறா இது.

நீ என்னைக் கொலை செய்து 10 நாள் நான் டேடன்ஸ் ஹொஸ்பிடலில் குற்றுயிராய்ப் படுப்பதை பார்த்து வர உன் சோதரன் DR. ஹபீஸை அனுப்பி வைத்து வேவுத் தகவல்களையும் சோதித்துப் பாரக்கும் அளவுக்கு ஏன் உன் நெஞ்சு கல்லாகிவிட்டது.

நான் என் ஊடக உறவுகளோடு உறவாட ஊர் வந்துவிட்டேன்.அல்ஹம்துலில்லாஹ்.

தலைவா!
இன்னும் உன் மமதையின் அலங்கோலத்தை அரங்கேற்று.என் மண்ணில் காங்கிரஸின் கண்ணீரோடு புதையும் நாள் வருவதற்கு முன் உன் செங்கோல் கொண்டு உன் தாயின் இதயத்தைக் கூட உரசுப் பார்க்கும் வரை உயிரைப் போட்டு வை இறைவா என்று நான் என் ரப்பிடம் பிராத்திக்கின்றேன்.

தலைவா!
இப்போதாவது சொல் என் அளவில் இது வரை நான் கட்சிக்குச் செய்த பங்களிப்புக்கு உன்னளவில் எனக்குச் செய்ததைச் சொல்லிக் காட்டு ஊரும், போராளிகளும் அறியட்டும்.
தலைவன் ஹக்கீம் என்னைக் கொன்று விட்டான்.

அக்கரைப்பற்று மண் என் மீது சேறு அடிக்கின்றது. ஊருக்கு எதிராக ஹக்கீமோடு நின்றாயே? பார்த்தாயா முடிவை என்று ரொம்ப அவமானமாப் போச்சுடா.

இதைவிட என்னைப் போன்ற போராளிகளுக்கு நஞ்சைக் கொடு தலைவர் மர்ஹூம் அஷ்ரஃப் காட்டித் தந்த போராட்டத்திலிருந்து அவர்கள் மீள்வதற்கு..

3 comments:

  1. பல அரசியல் தலைவர்கள் தனது சமூகத்துக்கு பல சேவைகள் செய்து தொடர்ந்தும் பதவியில் இருப்பதற்கு முயற்சிப்பார்கள் .ஆனால் ஹகீம் அவர்கள் குறிப்பிடத்தக்க எந்தவொரு பணிகளையும் தனது சமூகத்துக்கு செய்யாமல் தொடர்ந்தும் தலைமை பதவியில் இருந்து வருகின்றார் .அந்தவகையில் இவர் ஒரு கின்னஸ் சாதனையாளர் .மேலும் தனது கருத்துக்கு எதிரான கருத்துள்ள தனது கட்சி உறுப்பினர்களை எதுவித ஆரவாரங்களும் இல்லாமல் பழிவாங்குவதிலும் இவர் ஒரு சாதனையாளர் .

    ReplyDelete
  2. Minister Hakeem got support from main political party. This is a strategy of divide and rule. So he can't or members of the party can't take any division. This how see the SLMC current Situation.

    ReplyDelete
  3. Minister Hakeem got support from main political party. This is a strategy of divide and rule. So he can't or members of the party can't take any decision.This how I see the current Situation of SLMC.

    ReplyDelete

Powered by Blogger.