Header Ads



"ஹக்கீம்" லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை - ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

பாரிய நிதி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணைக்குழுவின் செயலாளர் பதவியிலிருந்து லெசில் டி சில்வா நீக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலாளர் பீ.பி.அயகோன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று இது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்…

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் செயலாளராக கடமையாற்றி வந்த லெசில் டி சில்வாவை பணி நீக்கவோ அல்லது விலக்கவோ இல்லை.

இந்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் ஓராண்டாக காணப்பட்டது.

ஆணைக்குழுவின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீடிக்கப்பட்ட போது செயலாளர் பதவிக்காக எச்.டபிள்யு.குணதாச நியமிக்கப்பட்டார்.

செயலாளராக கடமையாற்றிய லெசில் டி சில்வாவின் பதவிக் காலத்தை நீடிக்காது வேறும் ஒருவரை அதற்காக நியமிக்கப்பட்டதனைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

புதிதாக செலயாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள குணதாச ஓய்வு பெற்ற சிவில் அதிகாரியொருவர் எனவும், ஆணைக்குழுவின் பணிகளை வினைத்திறனாக மேற்கொள்ள குணதாச சிறந்த முறையில் பங்களிப்பு வழங்குவார் எனவும் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார்.

ரவூப் ஹக்கீமிடம் விசாரணை மேற்கொள்ளவிருப்தாக லெசில் டி சில்வா அறிவித்ததையடுத்தே அவர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக முன்னர் செய்திகள் வெளியாகயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.