"அரசாங்கத்தை கவிழ்க்க முடியும், என்பது வெறும் மாயையே"
அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என்பது வெறும் மாயையே என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தனர்.
போர் நிறைவடைந்ததன் பின்னர் திட்டமிட்டு எந்தவொரு அரசாங்கமும் அபிவிருத்தி நோக்கிச் செல்லும். எனினும் கடந்த அரசாங்கத்தினால் திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தி நோக்கி நகர முடியவில்லை.
அபிவிருத்தித் திட்டங்களின் மூலம் தரகுப் பணமே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
1977ம் ஆண்டில் பொருளாதாரக் கட்டமையை மாற்றியமைக்க நாம் செயற்பட்டோம்.
மஹாவலி அபிவிருத்தித் திட்டம் ஊடாக மின் உற்பத்தியை அதிகரித்தோம். மஹாவலி அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மின் உற்பத்தியை இரட்டிப்பாக உயர்த்தினோம்.
மஹாவலிக்கு செலவிட்ட தொகை ஹம்பாந்தோட்டைக்கு அல்லது மத்தளவிற்கு செலவிட்ட தொகையைப் போன்று விரயமாகவில்லை.
பொய்யான கண்காட்சிகளை நடத்தி, ஹைட் பார்க் மைதானத்தை நிறைத்து, போலியான விடயங்களை பிரச்சாரம் செய்து, அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால் அது வெறும் மாயை மட்டுமேயாகும்.
எதிர்வரும் பத்து ஆண்டுகள் வரையில் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment