Header Ads



தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்குமா - விளக்குகிறார் மைத்திரியின் சகோதரர்

அரசாங்கம் பரிந்துரை செய்துள்ள புதிய வரி திருத்தங்களின் படி தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று ஸ்ரீலங்கா டெலிகொம்மின் தலைவர் குமாரசிங்க சிறிசேன கூறியுள்ளார்.

இதுவரை நிதியமைச்சோ அல்லது அரசாங்கமோ அது சம்பந்தமான உத்தியோகபூர்வ அறிவிப்பை வழங்கவில்லை என்றும் அவர் கூறினார்.

2016 ஏப்ரல் மாதம் 01ம் திகதி முதல் புதிய வரி திருத்தங்களின் படி தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கப்படுமா என்று அத தெரண அவரிடம் வினவியபோது இவ்வாறு கூறியிருந்தார்.

இது தொடர்பாக மேலும் விளக்கமளித்த அவர்,

"புதிய வரி திருத்தங்களின் படி 15% வெட் வரி தொலைபேசி கட்டணங்களில் உள்ளடக்கப்படுமா இல்லையா என்பது குறித்து இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எவ்வாறாயினும் அது உள்ளடக்கப்பட்டால் தற்போதிருக்கும் 31% வரிக்கு மேலதிகமாக பாரிய தொகை செலுத்த வேண்டி ஏற்படும். எனினும் அந்த வரியை செயற்படுத்த வாய்ப்பில்லை.

தொலைபெசி கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் என்று வெவ்வேறான கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும் மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியுமான வழிமுறைகள் சம்பந்தமாக ஆராயப்படுகின்றது. புதிய வரி திருத்தங்களினூடாக தொலைபேசி கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என்று எதிர்பார்க்கின்றேன்" என்றார்.

No comments

Powered by Blogger.