தனியார் வைத்திய பல்கலைக்கழகங்கள் தேவையா..? இல்லையா..??
ஒரு தரப்பினர் இதற்கு சார்பாகவும் இன்னொரு தரப்பினர் இதற்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் பாரிய ஆர்ப்பாட்டங்களும் இரு தரப்பினாராலும் நாடளாவிய நடாத்தப்பட்டு வருகின்றது.
தனியார் வைத்திய கல்லூரிகளை அனுமதிக்காதது பல மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இதனை தனியார் கையில் கொடுக்காமல் அரசு மாணவர்களிடம் பணம் பெற்றாவது இந்த வாய்ப்பை மாணவர்களுக்கு கொடுக்க முயற்சிக்க வேண்டும். வெளிநாடுகளில் பல நாடுகள் இந்த வழிமுறையை பயன்படுத்தியே அரச பல்கலைக்கழங்களில் வாய்ப்பு கிடைக்காத கல்வியில் ஆர்வம் மிகுந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கும் வாய்ப்பை வழங்குகிறது. என்ற கருத்தில்
இச்சர்ச்சை தொடர்பில் ராவய பத்திரிகையில் வெளியான பிபாஷ்வரனின் கருத்துக்களின் சில பகுதிகள் தமிழில்
இலங்கை அரசியல யாப்பின் படி நாட்டின் பிரஜைகள் அனைவரும் கல்வி பெறுவது என்பது அனைத்து தரப்பு மக்களினதும் அடிப்படை உரிமையாகும். உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் 17 வீதமானவர்கள் மாத்திரம் அரசின் 15 பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் அதே நேரம் 83 வீதமான மாணவர்களுக்கான அந்த வாய்ப்பு இல்லாமல் போவதென்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகும்.
இலங்கை அரசியல யாப்பின் படி நாட்டின் பிரஜைகள் அனைவரும் கல்வி பெறுவது என்பது அனைத்து தரப்பு மக்களினதும் அடிப்படை உரிமையாகும். உயர்தரப் பரீட்சையில் சித்தியடையும் 17 வீதமானவர்கள் மாத்திரம் அரசின் 15 பல்கலைக்கழகங்களில் உள்வாங்கப்படும் அதே நேரம் 83 வீதமான மாணவர்களுக்கான அந்த வாய்ப்பு இல்லாமல் போவதென்பது அவர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவதாகும்.
இலங்கையில் உயர் தரத்தில் சித்தியடையும் பெரும்பாலான மாணவர்களுக்கு அரச பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைக்காமல் போக காரணம் அம்மாணவர்கள் அறிவில் குறைந்தவர்கள் என்ற காரணத்துக்காக அல்ல அம்மாணவர்களுக்கு உயர்கல்வி கற்பதற்கான வசதியை செய்து கொடுப்பதற்கான வசதி பணம் அரசிடம் இல்லாமையாகும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் போன்று மாணவர்களிடம் பணம் பெற்று பல்கலைக்கழக வசதிகளை அபிவிருத்தி செய்து வாய்ப்பு கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வசதியை அரசால் வழங்க முடியும்.
2007 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வைத்திய துறையில் கல்வி கற்கும் மாணவர் ஒருவருக்கு அவர்களின் கற்கைக்காக இந்த நாட்டு மக்கள் 15 லட்சம் ரூபாய் மறைமுக வரிச்சுமையை சுமக்கின்றனர். இவ்வரிச்சுமையை தவணைக் கொடுப்பனவின் அடிப்படையில் மாணவர்களிடம் திரும்ப பெரும் முறை ஒன்றை அரசால் அறிமுப்படுத்தவும் முடியும். இல்லையெனில் 5 வருடத்துக்கு ஒரு முறை அவர்களுக்கு கிடைக்கும் இறக்குமதி தீர்வையற்ற வாகனத்தை விற்பனை செய்துவிட்டு கிடைக்கும் பணத்தின் மூலம் இக்கடனை ஒரே தடவையில் திருப்பி செலுத்தும் முறையையும் அரசால் அறிமுகப்படுத்தலாம். தீர்வையற்ற வாகனத்தை 60 லட்சத்துக்கு வாங்கும் இவர்கள் வெளியில் விற்பனை செய்வது 100 லட்சத்துக்கு. இதன் மூலம் இவர்களுக்கு கிடைக்கும் சுத்த லாபம் 40 லட்சம். அமைச்சர்கள், அரசின் உயர் அதிகாரிகள், வைத்தியர்களுக்கு வழங்கப்படும் தீர்வையற்ற வாகனம் மற்றும் அதன் நிதிச்சுமையை மறைமுகமாக மிதிவண்டியில் செல்வோரும் வாகனமே இல்லாமல் கால்நடையாக பாதையில் செல்லும் அடிமட்டத்தினர் மீது சுமத்தப்படுகிறது.
வறுமையில் வாடும் மாணவர்கள் தவிர்ந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களிடம் அதற்கான பணத்தை பெற்று பல்கலைக்கழகங்களில் பாடநெறிகளை சர்வதேச தரத்துக்கமைய வடிவமைத்தால் வெளிநாட்டு மாணவர்களும் பணம் செலுத்தி கல்விகற்பதற்கு இங்கு வருவார்கள். இதனால் இங்கிலாந்து அவுஸ்திரேலியா நாடுகளை போன்று இங்கு யுனிவெசிடி கொலேஜஸ் அமைத்து உயர் தரத்தில் தெரிவு செய்யப்படாத மாணவர்ககளுக்கு பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கலாம்.
சாதாரணதரம், உயர்தரத்திலிருந்து விடுபட்டு செல்லும் சுமார் 5 லட்சம் மாணவர்கள் முச்சக்கரவண்டி ஓட்டுதல் அல்லது எங்காவது பாதுகாப்பு அதிகாரியாக வேலை செய்தல் போன்ற தரத்தில் குறைந்த தொழில்களுக்கு செல்வதனை தடுக்க முடியும். இலங்கையில் இயங்கி வரும் 7 வைத்திய பீடங்களுக்கும் அரசால் ஒதுக்கப்படும் நிதியுதவி மிகவும் குறைவு. சர்வதேச தரம் வாய்ந்த பயிற்சிகளையளிக்க பல்கலைக்கழங்களுக்கு வசதிகள் இல்லையென்றே கூறலாம்.
2016 பெப்ரவரி 14 ஆம் திகதி ஆரம்பித்து பல நாட்களாக பேராதெனி பல்கலைக்கழக முதலாம் ஆண்டு மாணவர்கள் 300 பேர் வகுப்பை பகிஷ்கரித்து வந்தனர். இவர்களின் இப்பகிஷ்கரிப்புக்கு காரணம் இறுதி ஆண்டு மாணவர்கள் மேற்கொள்ளும் பகிடிவதையை எதிர்ப்பதே. இப்படியான ஒழுக்கமற்ற சூழ்நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கற்க வருவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
கடந்த 30 வருடத்துக்குள் சர்வதேச புலமைவாதிகளின் கவனத்தை ஈர்க்க கூடிய தரத்தில் எந்தவித ஆய்வுகளோ விஞ்ஞான கண்டுபிடிப்பிலோ இலங்கை பல்கலைகழங்களிலிருந்து சர்வதேசத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இந்தியா பங்களாதேஷ் வியட்நாம் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் உயர்கல்வி நிறுவனங்கள் மிக தாழ்ந்த நிலைக்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2013/2014 உலக தரப்படுத்தலின் படி
மொரட்டுவ பல்கலைக்கழகம் 2150 ஆவது இடத்தில்,
கொழும்பு பல்கலைக்கழகம் 2255 ஆவது இடத்தில்,
ருகுனு பல்கலைக்கழகம் 2353 ஆவது இடத்தில்,
பேராதெனிய பல்கலைக்கழகம் 2973 ஆவது இடங்களில் இருக்கின்றது.
மிகவும் குறைந்த படிப்பறிவு வீதம் உள்ள ஆபிரிக்கா நாடுகளின் பல்கலைக்கழங்கள் எம்மை விட மிகவும் முன்னிலையில் இருக்கின்றனர் என கருத முடியும்.
நமீபியா பொலிடெக்னிக் 1319 ஆவது இடத்தில்,
சூடானின் கார்டூம் பல்கலைக்கழகம் 1394 ஆவது இடத்தில்
எத்தியோப்பியாவின் அட்ஸ்அபாபா பல்கலைக்கழகம் 1903 ஆவது இடத்தில்
உகன்டாவின் மகராரே பல்கலைக்கழகம் 1174 ஆவது இடத்தில் இருக்கின்றன.
மேற்கூறியவாறு பல்கலைக்கழங்களை தரப்படுத்த அரசிடம் போதிய நிதிவசதி இல்லாவிடின்
நாம் மேற்கூறியவாறு பல வழிகளில் அதற்கான நிதியை நியாயமான முறையில் பெற்றுக்கொள்ளலாம்.
நன்றி (Ravaya)
தமிழில் ARM INAS
(எனது தனிப்பட்ட சில கருத்துக்கள்)
அண்மையில் பேராதனை அரச வைத்தியசாலையில் பெண் குழந்தை ஒன்றின் வலது காலில் செய்ய வேண்டிய சத்திரசிகிச்சையை ஒரு வைத்தியர் இடது காலில் செய்து அக்குழந்தையை ஆபத்தில் தள்ளினார். இத்தவறுக்காக நாட்டின் அனைத்து வைத்தியர்களையும் குறிப்பிட்ட தவறை இழைத்த வைத்தியர் படித்த பல்கலைக்கழகத்தையும் குறை கூறுவதிலும் திட்டித்தீர்ப்பதும் நியாமாகாது.
அது போல் தான் தனியார் வைத்திய கல்லூரிகள் வந்தால் தரமில்லாத வைத்தியர்கள் உருவாவார்கள் என்னும் வாதமும் எந்த அடிப்படையும் அற்றதே. தரம் தொடர்பில் கரிசனை கொள்ள வேண்டியது அரசின் பொறுப்பு. அதனை விட்டுவிட்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து அதிகம் Z- Score எடுத்தால் தான் வைத்தியராகலாம் என்றெல்லாம் சட்டம் போடுவது. திறமையான மாணவர்களுக்கு இiழைக்கும் அநீதியே.
Good article. ..these medical doctors some times worse than devils..money hungry devils.
ReplyDeleteIt is very very important to the country. Because more than a 85% percent of student resources not been used in the country after the A/L, it is too late if don't resized it at least now.
ReplyDeleteIf we don't do it now in future people will lots of consequences, because if sort of doctores. Recent incident in Kandy, a school girl was treated wrong leg. Hospitals can't cope now because of too many pations and lack of qualified doctores.
மாங்காய் மடயன் களுக்கு இது எல்லாம் எப்ப புரிய போகுது?
ReplyDeleteI am a holder of 10A in the o/l and missed the medicine by very little margin.All 3 attempts are same. Stupid government and education system in this jokers nation, total 15 years of my education went on ruin without any benefits to me,my parents or country . Sincr I am a girl, I cant ride a 3 wheeler or employed as a security .
ReplyDeleteNot only medical college we need the nursing college as well. Others wise we will be in need of hiring these professional either from philippines or kerala,
ReplyDeleteIt's very urgent. .we need to setup private universities. See how government doctors as well nurses treating patients. And no need to tell about muslim doctors..worst among worst.
ReplyDelete