சிரியாவில் ரஷ்யாவின் ரோபோக்கள்
சிரியா நாட்டிற்குள் இன்னும் சில தினங்களில் ’ரோபோக்களை’(Robots) அனுப்ப ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் உத்திரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சிரியாவில் உள்ள பழங்காலப்பகுதியான பல்மைராவை சில மாதங்களுக்கு முன்னர் ஐ.எஸ் தீவிரவாதிகள் தங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
இதனை தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக போரிட்டு வந்த சிரியா அரசாங்கம் நேற்று பல்மைராவை மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது.
ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த போரில் தோல்வியை தழுவ ரஷ்ய ராணுவமும் பெரிதும் துணை நின்றுள்ளது.
எனினும், ஐ.எஸ் தீவிரவாதிகள் பல்மைராவில் உள்ள பட இடங்களில் ஆபத்தான கண்ணி வெடிகுண்டுகளை புதைத்துள்ளனர்.
இந்த கண்ணி வெடிகுண்டுகளை கண்டுபிடித்து அப்புறப்படுத்தவே தற்போது ரோபோக்களை அனுப்ப ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பங்கள் கொண்ட ரோபோக்கள் மட்டுமின்றி உயர் மின் பொறியாளர்களும் விரைவில் சிரியாவுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
இந்த தகவலை ரஷ்ய ராணுவத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவரான Valery Gerasimov என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
Post a Comment