Header Ads



மத அறிவு வீழ்ச்சியடைகிறது - ஞாயிறு தின, டியூசன் வகுப்புக்கு தடைவேண்டும் - மரிக்கார்


பாடசாலைகளில் 9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புக்களைத் தடைசெய்யும் வகையில் பாராளுமன்றத்தில் என்னால் முன்வைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட யோசனையை சட்டமாக்குவதற்கு சகல மதத் தலைவர்களினதும் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

தன்னால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த தனியார் பிரேரணை தொடர்பில் மல்வத்தை மகாநாயக்க தேரரை சந்தித்து விளக்கமளிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தனது பிரேரணை குறித்து மகாநாயக்க தேரரிடம் பா.உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் நீண்ட விளக்கமொன்றினை வழங்கினார். இது தொடர்பில் தொடர்ந்தும் அவர்  விளக்கமளிக்கையில், 

9ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களின்யடை மத அறிவு படிப்படியாக வீழ்ச்சிந்து வருகின்றது. இதனால் நாட்டில் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள் எ ன இக்குற்றச் செயல்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனவே இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் 9ஆம் ஆண்டு வரையான மாணவர்களின் மத அறிவினை மேம்படுத்த விரிவான திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். கிழமைக்கொரு முறையாவது மாணவர்களின் மத அறிவினை மேம்படுத்த பெற்றோர்கள் முன்வர வேண்டும். இது தற்காலத்தின் மிகவும் இன்றியமையாத தேவையாகும்.

எனவே ஞாயிறு தினங்களில் 9ஆம் ஆண்டு வரை தனியான வகுப்புக்களை தடை செய்ய வேண்டுமென்ற தனியார் பிரேரணையை முன்வைத்துள்ளேன். மல்வத்தை மகாநாயக்க தேரர் இதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். இது குறித்து இந்து, இஸ்லாம் மதத் தலைவர்களுடனும் கலந்துரையாடவுள்ளேன். அவர்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்களென நம்புகிறேன்.

மத ரீதியான கல்வியகங்கள் திறக்கப்படுகையில் சிறைச்சாலைகள் மூடப்படுகின்றன என்ற கருத்தினை நோக்காகக்கொண்டு எனது இப்பிரேரணையை வென்றெடுக்க மக்களினதும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றேன். இதன்மூலம் எமது இலங்கைத் தாய் திருநாட்டை உலகின் பண்புமிக்க நாடாக காட்டுவதற்கு முடியுமென்றும் அவர் இதன்போது தெரிவித்தா

No comments

Powered by Blogger.