Header Ads



நான் மனித நேயமுள்ள பௌத்ததுறவி என்றரீதியில், பாதாள உலகத் தலைவனை பார்க்கச் சென்றேன்

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் தெமட்டகொட சமிந்தவை பார்வையிட பொதுபல சேனாவின் செயலாளரான ஞானசார தேரர் வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சென்றுள்ளார்.

இதன்போது தான் சிறையில் காலுக்கு செருப்பு அணியாததைக் கண்ட சமிந்த தனக்கு செருப்பு வாங்கி தந்ததோடு தனக்கு சிறையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்த தந்ததாக தேரர் குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை கடந்த புதன்கிழமை வெலிக்கடை சிறைச்சாலை பஸ் வண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பாதாள உலகத் தலைவரான தெமட்டகொட சமிந்த படுகாயமடைந்து தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வைத்தியசாலைக்கு தனது பரிவாரங்களுடன் சென்ற ஞானசார தேரர் சமிந்தைக்கு பிரித் நூலையும் கட்டியுள்ளார்.

அத்துடன் சமிந்த பாதாள உலகத் தலைவரா? குற்றவாளியா? என்ற விடயங்களுக்கு அப்பால் நான் ஒரு மனித நேயமுள்ள பௌத்த துறவி என்ற ரீதியில் அவரை பார்ப்பதற்கு சென்றேன் என்றும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

4 comments:

  1. Neer solvazellaam unmai , unmaiyaith thavira veronrumillai
    enbazuthaan ellorukkume theriyume " Deivaththin Deivame !"

    ReplyDelete
  2. அடடா! சாத்தான் மீண்டும் வேதம் ஓதுகின்றதே...?

    ReplyDelete
  3. இதேபோல் தேரருக்கு நிறையவே ரகசிய சிநேகங்கள் உண்டு. மனைவி மக்கள் இருப்பதாக இவரின் பழைய நண்பர் ஒருவர் சில வருடங்களுக்கு முன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்.

    ReplyDelete
  4. அடடா அப்போ பிரபாகரன் உயிருடன் சிறையில் இருந்திருந்தால் பார்க்கப்போயிருப்பீர்களோ மனித நேயம் ஊற்றெடுக்கும் பௌத்த துறவி அவர்களே?

    ReplyDelete

Powered by Blogger.