Header Ads



"மஹிந்தவை கடவுளாக நினைக்கும், பக்தர்களின் கூட்டமே நேற்று நடைபெற்றது"


நேற்று (17) கொழும்பில் நடைபெற்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிகளின் பேரணி மக்களை ஒன்றிணைத்து நடத்திய பேரணி அல்ல என்றும் மஹிந்த ராஜபக்ஷவை கடவுளாக நினைக்கும் நம்பிக்கைக்குறிய பக்தர்கள் சிலருடைய கூட்டமே அது என்றும் இடதுசாரி கேந்திரத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து உரையாற்றி அவர்,

நான், நான் மட்டுமே, நானே வெற்றி கொண்டேன், எனது குடும்பம் என்ற விதமாகவே மஹிந்த ராஜபக்ஷவின் நேற்றை உரை இருந்தது என்பதுடன், மக்கள் சம்பந்தமாக எந்தவொரு விடயத்தையும் அங்கு அவர் குறிப்பிடவில்லை என்றும் சமீர பெரேரா கூறினார்.

இதன்காரணமாகவே ஜனவரி 08ம் திகதி மக்கள் ஒன்றிணைந்து ராஜபக்ஷ நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மஹிந்த நிர்வாகத்தில் ஜனநாயகத்திற்கு இடமிருக்கவில்லை என்றும் இடதுசாரி கேந்திரத்தின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா கூறினார்.

2 comments:

  1. Not at all . They were all members of racist club . Members of
    robbery club . Definitely members of anti-minority club .
    Mahinda wants to go to prison so that he can win people's sympathy and win over My3 and Ranil. Srilankans are living on
    emotions and not intelligence and Mahinda wants to play with
    it against My3 . He thinks he can go on like this and create
    tension in the country . People will soon learn from this.

    ReplyDelete

Powered by Blogger.