மகிந்தவின் எச்சரிக்கை
ஹைட் பார்க்கில் நடந்த அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றினால், உடனடியாக புதிய கட்சி ஒன்றை உருவாக்குவதற்கு வழி வகுக்கும் என்று எச்சரித்துள்ளார் மகிந்த ராஜபக்ச.
ஹைட் பார்க்கில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 36 சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருகிறது.
இந்த நிலையில், இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ச,
கடந்த வாரம் நடந்த ஹைட் பார்க் கூட்டத்தில் பங்கேற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்தவொரு சூழ்நிலையிலும், கட்சியை விட்டு வெளியேற்ற முடியாது.
அவ்வாறு வெளியேற்றினால், அவர்கள் புதிய கட்சியை விரைவாக உருவாக்குவார்கள் என்று அரசாங்கத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் அஞ்சுகின்றனர்.
என்மீது தொடரப்படும் தாக்குதல்கள், எனது பரப்புரைகளை இன்னும் வலுப்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment