எச்சரிக்கையை மீறுவாரா மகிந்த..?
கொழும்பில் மார்ச் 17ஆம் திகதியன்று நடைபெறவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இதனை தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் இதனை இன்று -15- தெரிவித்த அவர், ஏனைய கட்சி தலைவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பர் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்ச இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்றே அவருக்கு நெருக்கமான தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்போர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து விலக்கப்படுவர் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையால் மஹிந்த வீண் பிரச்சினை ஒன்றில் சிக்க விரும்பமாட்டார் என்றே நம்பப்படுகிறது.
எனினும் அதிக சனங்களை குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு அழைக்கும் முகமாகவே மஹிந்தவும் அதில் பங்கேற்பதாக கூட்டு எதிர்க்கட்சி அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களிடம் தெளிவாகக் கொள்கையை கோரிக்கையை முன்வைத்து அரசியல் புரியத் தெம்பில்லாத புழுக்களையொத்த கோழைகள் இப்படித்தான் நடந்துகொள்வார்கள்.
ReplyDelete