Header Ads



ஹேக்கர்கள் கைவரிசை - அமெரிக்க வங்கியில், திருடிய பணம் இலங்கையில் வைப்பு - BBC

அமெரிக்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டிருந்த வங்காளதேச அரசின் கணக்கிலிருந்து பணம் ஹேக்கர்களால் திருடப்பட்டு இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான அதிர்ச்சித் தகவல்கள் அடங்கிய செய்தியொன்றை பி.பி.சி. செய்திச் சேவை இன்று வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வங்காளதேச அரசின் சுமார் 28 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு சொத்துக்களாக அமெரிக்க வங்கியொன்றில் வைப்பிலிடப்பட்டு பராமரிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த வங்கிக் கணக்கின் பாதுகாப்பு கடவுச்சீட்டை உடைத்த ஹேக்கர்கள் அதிலிருந்த பணத்தைத் திருடி இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்துள்ளனர்.

சுமார் பத்து பில்லியன் அமெரிக்க டொலர்கள் இவ்வாறு சட்டவிரோதமாக கையாடல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான தகவல்கள் வெளிவந்தவுடன் வங்காளதேசத்தின் நிதிப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் துரித கதியில் செயற்பட்டு, கையாடல் செய்யப்பட்ட பணத்தை மீளப் பெற்றுக் கொள்வதில் களமிறங்கியுள்ளனர். எனினும் அவர்களால் நான்கில் ஒரு மடங்கு பணத்தையே மீட்க முடிந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தற்போது வங்காளதேச அதிகாரிகளினால் பிலிப்பைன்சில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கும் குறித்த விசாரணைகள் விஸ்தரிக்கப்படலாம்.

எனினும் வங்காளதேச அரசாங்கத்தின் கணக்கைக் கொண்டுள்ள அமெரிக்க வங்கி இத்தகவலை மறுத்துள்ளது.

தனது வங்கியின் பாதுகாப்பு ஏற்பாடுகளை எந்தவொரு ஹேக்கராலும் உடைக்க முடியாது என்று வங்கி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments

Powered by Blogger.