கடத்தல் நாடகம் முடிந்தது, விமானத்தை கடத்தியவர் கைது (படங்கள்)
எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் இருந்து கெய்ரோவுக்கு சென்ற விமானத்தை கடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று கடத்தப்பட்ட குறித்த விமானம் சைப்ரஸ் நாட்டின் லர்னகாக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
பின்னர் அதிலிருந்த வௌிநாட்டு பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட சிலரைத் தவிர ஏனைய அனைவரையும் கடத்தல்காரர் வௌியேற அனுமதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் அவர்களையும் விடுவித்து விட்டு கடத்தல்காரர் சரணடைந்ததாக வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இந்தநிலையில் இது குறித்து சைப்ரஸ் ஜனாதிபதி நிக்கோலஸ் கூறுகையில், "எகிப்து விமானம் கடத்தப்பட்டது பயங்கரவாதத்திற்காக அல்ல, இப்ராஹிம் சமஹா என்பவர் (27) தனது மனைவியை காண்பதற்காகவும், அரசியல் அடைக்கலம் கேட்பதற்காகவுமே அதனைக் கடத்தினார்" என்றார்.

Post a Comment