"மின்னஞ்சல் நிதிமோசடி" எச்சரிக்கை
மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள் மின்னஞ்சல் மூலம் மேற்கொள்ளப்படும் நிதிமோசடி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
மின்னஞ்சல் ஊடாக நிதிக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் வர்த்தகர்களை இலக்குவைத்து இந்த மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கணனி துரித நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொழில்நுட்பப் பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்த குறிப்பிட்டுள்ளார்.
கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் மற்றைய தரப்பினருக்கு நிதியை பரிமற்றும் போது வேறொரு புதிய வங்கிக் கணக்கிற்கு வைப்பீடு செய்யுமாறு மின்னஞ்சல் ஊடாக தகவல் அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறிப்பாக இறக்குமதியாளர் ஒருவராயின், அவரது இறக்குமதிக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு முற்படும் சந்தர்ப்பங்களில், புதிய கணக்கொன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், அதில் வைப்பீடு செய்யுமாறும் சூட்சுமமான முறையில் திசைதிருப்பப்படுவதாக இலங்கை கணனி துரித நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறியியலாளர் கூறினார்.
இத்தகைய நிலைமையின்போது கொடுக்கல் வாங்களில் ஈடுபடும் நபருடன் அல்லது நிறுவனத்துடன் தொடர்புகொண்டு உறுதிசெய்யப்பட்ட பின்னரே பணக் கொடுக்கல் வாங்கலை முன்னெடுப்பது சிறந்ததாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தங்களின் மின்னஞ்சல் கணக்கை பாதுகாப்பான முறையில் பேணுவதன் மூலம் இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்கு வழியேற்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment