Header Ads



"மிம்பரில் ஏறுபவவர்களே, குத்பாக்களை தடைசெய்து விடாதீர்கள்"


 _Inamullah Masihudeen_

இன்று 25.03.2016 கொழும்பில் ஒரு ஜும்மா பிரசங்கத்தைக் கேட்டேன், அவ்வாறான ஒரு சில குத்பாக்களை உளவுத் துறையினர் பதிவு செய்து கொண்டால் மதரசாக்களை மாத்திரமல்ல, குத்பாக்களையும் தடை செய்வதற்கு போதுமான அத்தாட்சிகளை பெற்றுக் கொள்ள முடியும்.

அறபு முஸ்லிம் உலகில் உள்ள அறிஞர் பெருமக்கள் தாங்கள் வாழும் காலத்திற்குரிய சுன்னாஹ்வை அறியாததன் விளைவாக இன்றைய புரட்சிகளுக்கும் அழிவுகளுக்கும் அவர்களே அழைப்பு விடுத்துள்ளார்கள், அதனாலேயே இலட்சக்கணக்கில் மக்கள் அழிகின்றார்கள் என்று காரசாரமாக சாடினார்.

மஹதி அலைஹிஸ்ஸலாம் வரும் வரை கிலாபாத் பற்றி பேசவோ ஆட்சியாளர்களின் அராஜகங்கள் பற்றி பேசவோ கூடாது என்று கூறினார்.

ஆனால் குறிப்பிட்ட கதீப் வாழுகின்ற கால சூல் நிலைகளை மறந்து தனக்குத் தெரிந்த புதுப்புது வியாக்கியானங்களை மிம்பர் மேடையில் இருந்து பேசிய பொழுது இலங்கை முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்து கவலை மேலிட்டது.

உண்மையில் கதீப் அவர்கள் சொன்ன ஒரு சில விஷயங்கள் உணமையாக இருந்தாலும், பெரும்பாலான விஷயங்கள் ஊகங்களாகவும், முஸ்லிம் நாடுகளுக்கிடையில் நிலவும் அரசியல் அதிகார இழுபறிகளை மையமாக வைத்து எழுதப்பட்ட மிகைப்படுத்தப் பட்ட கருத்துக்களாகவும் இருந்தன.

அவர் பேசிய உரை ஒலி ஒளிபரப்புச் செய்யப்பட்டிருந்தால், குறிப்பாக சிங்கள ஆங்கில மொழிகளில் நாடு முழுவதும் ஒரு பித்னா ஏற்படுத்தப்படுவதற்கு போதுமாக இருந்திருக்கும் என நினைக்கின்றேன்.

குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம் களுக்கெதிராக காழ்ப்புணர்வுப் பரப்புரைகளை மேற்கொள்கின்ற இன மத வெறி குழுக்கள் எங்களுக்கு எதிராக, உலக முஸ்லிம்களுக்கு எதிராக முன்வைக்கின்ற கருத்துக்களை மெய்பிக்கப் போதுமான ஆக்ரோஷமான கருத்துக்களை ஹஸரத் பேசிய பொழுது கிட்டிய எதிர்காலத்தில் மீண்டும் உள்வீட்டிலேயே பித்னாக்கள் உருவாக்கப் படுமோ என்று அச்சம் ஏற்பட்டது.

தனது கருத்துக்களை சொல்வதற்கு சுமார் பத்து மணித்தியாலங்கள் தேவை என்று சொன்ன ஹஸரத் ஒரு ஐந்து மணித்தியாலம் ஏற்பாடு செய்தால் வருகை தந்து ஒரு விளக்கமளிப்பதாகவும் வேண்டுகோள் விடுத்தார்.

குறிப்பாக அவரது சர்வதேச அரசியல் கருத்துக்கள் எமது அகீதாவுடன் முரண்படும் ஒரு பிரிவினரின் எழுத்துக்களில் இருந்து குறிப்பாக இன்டர்நெட் ஊடாக பெறப்பட்டவையாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றியது.

இலங்கையில் உலமாக்கள், அரசியல்,சிவில் தலைமைகள் காலத்திற்கு ஏற்ற பங்களிப்புக்களை செய்யத் தவறியுள்ளனர் என்ற எங்கள் மனக் குமுறல்கள் ஒரு புறமிருக்க, கள நிலவரங்களை மென்மேலும் மோசமடையச் செய்யும் இவ்வாறான பிரசங்கங்கள் குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அதிகூடிய கவனம் செலுத்துதல் வேண்டும்.

கண்ணியத்திற்குரிய நண்பர்களே, நீங்கள் தப்லீகிகளாகாவோ, தரீக்காவாதிகளாக்வோ, சலபிகளாகாவோ, ஜாமதே இஸ்லாமியினராகவோ, இக்வானிகளாகவோ, இல்லை ஏதேனும் அரசியல் கட்சியை, சிந்தனை முகாமை சேர்ந்தவர்களாக இருங்கள் தயவு செய்து அல்லாஹ்விற்காக நாங்கள் அனைவரும் ஒரே உம்மத்தினர், எங்கள் எல்லோருக்கும் பொது எதிரிகள் இருக்கின்றார்கள் என்பதனை ஆழமாக மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

மிம்பர் மேடைகளிலோ, பொது அரங்குகளிலோ, சமூக ஊடகங்களிலோ நாங்கள் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரை மட்டரகமாக பேசுவதோ, ஏனைய மதத்தினரை காரசாரமாக விமர்சிப்பதோ அல்லது பொதுமக்களுக்கு புரியாத பூகோள அரசியல் ஊகங்களை அதிகப் பிரசங்கித் தனமாக பேசுவதோ நிச்சயமாக தீனுக்கும் உம்மத்திற்கும் எதிர்மறையான விளைவுகளையே கொண்டு வந்து சேர்க்கும்என்பதில் சந்தேகமில்லை.i

நான் ஆலிம்களை விமர்சிப்பதற்கு தயங்குகின்றேன், என்னால் இயன்றதை செய்கின்றேன், அவற்றை சொல்கின்றேன். குறிப்பிட்ட ஹஸரத் அவர்களை சொல்ல சாடவுமில்லை. ஆனால் எம்மில் ஒரு சிலர் சமயோசிதமின்றி, இடம் பொருள் ஏவல் அறியாது அரைவேக்காட்டுத் தனமாக, உஷார் மடையர்கள் போல் ஆக்ரோஷமாக வெளியிடும் கருத்துக்கள் நிச்சயமாக முழு சமூகத்தையும் ஆபத்தில் தள்ளி விடும் என்பதில் சந்தேகமில்லை.

8 comments:

  1. ungalin karuththu unmaiyanazu aanaal sila maramandaihalukku ulahame vilagaza siripillahalin arivukooda illamal nadanthukolhirarhal

    ReplyDelete
  2. நல்ல ஆக்கம்.
    நாடு முழுதும் இது போன்றவர்கள் இருக்கிறார்கள்.
    இவர்களை educate பண்ண வேண்டும்

    ReplyDelete
  3. அன்பார்ந்த முஸ்லீம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்

    இந்த செய்தியில் சொல்லப்படுகின்ற விடயத்தினை நீங்கள் எல்லோரும் புரிந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.

    ஆலிம்கள் தான் விரும்பிய கருத்துக்களை சொல்லி சமுதாயத்தின் இருப்பினை கேள்விக்குறி ஆக்குவது இன்று இருக்கும் அரசியல் கள நிலவரங்களுக்கு ஏற்புடையதல்ல.

    மாறாக உலமா சபை இந்த ஆலீம்களை உரிய முறையில் நிர்வகிக்க வேண்டும். ஒவ்வொரு ஜும்ஆவிலும் என்ன செய்தி நாடளாவிய ரீதியில் சமுதாயத்துக்கு சொல்லப்பட வேண்டும் என்பதை நேர காலத்தோடு தீர்மானித்து நாட்டில் உள்ள அனைத்து ஜும்ஆ பள்ளி வாசல்களிலும் ஒரே செய்தியை சொல்ல உலமா சபை ஏற்பாடு செய்வது நன்மை பயக்கும்

    ReplyDelete
  4. In Sri Lanka there are many well educated Alims awilable. It the responsible of mosques trustee to give them opportunity. rather than thinking narow minded and thinking incide there group.

    ReplyDelete
  5. உரையைகை் கேட்கும் வரை விமர்சனத்தை ஏற்க முடியாது.

    ReplyDelete
  6. Moste of ulamas are doing kuthubah without any preparations. Some of them are targeting earn money only. SLJU and Muslim cultural affairs must be regular this matter.

    ReplyDelete
  7. யார் அந்த மௌலவி,?
    எந்த இயக்கம் ?
    அவர் அப்படி என்னதான் பேசிவிட்டார்
    என்ற தெளிவு இந்தக்கட்டுரையில் இல்லாத்து குறிப்பிடப்பட வேண்டியுள்ளது

    ReplyDelete

Powered by Blogger.