கொழும்பில் எலிகளுக்கு எதிரான, வேட்டை ஆரம்பம்
கொழும்பு மாநகர முதன்மை வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகரத்தில் எலிகளின் அதிகரிப்பு தொடர்பில் கிடைத்த முறைப்பாடுகளை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை, புறக்கோட்டை, பொரளை, வெள்ளவத்தை, மருதானை போன்ற இடங்களிலேயே எலிகளின் பெருக்கம் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதனையடுத்து எலிகளுக்கு எதிராக நச்சு பயன்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
எனினும் இதன் போது குழந்தைகளின் பாதுகாப்பை பெற்றோர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் முதன்மை வைத்திய அதிகாரி கோரியுள்ளார்.
கிரி அம்மாவை மட்டுமே கொல்லக் கூடாது. எலியம்மா, நுளம்பு அம்மாவை கொல்லுவது பாவமில்லை.
ReplyDeleteஇறுதிப் போரின் போது 40,000 மேற்பட்ட பெண்களையும் சிறுவர்களையும் கொன்று குவித்ததும் பாவமில்லை.