கோத்தபய ராஜபக்ஸ, அரசிடம் விடுக்கும் கோரிக்கை
வெள்ளைக் கொடி விவகாரத்தில் என்னை குற்றவாளியாக சித்தரித்து அவ்விடயம் தொடர்பில் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று அமைச்சர் சரத்பொன்சேகா கூறுகின்றார். அதனை செய்வதற்கு முன்பதாக ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்தார்.
முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தின் போது இயங்கிவந்த ரக்னா லங்கா ஆயுதக் களஞ்சிய நிறுவனத்தின் ஊழல், மோசடிகள் தொடர்பில் பாரிய ஊழல் விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்கு நேற்று வெள்ளிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப கட்டடத்தொகுதிக்கு வருகை தந்திருந்த வேளை ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கோத்தபாய ராஜபக் ஷ மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்;
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய வேண்டும். முறையான சட்டதிட்டங்களை பின்பற்றியே யுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்தோம். அந்தவகையில் யுத்தக்குற்றச்சாட்டுகளை பின்பற்றியவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என அமைச்சரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இவ்வாறான கருத்துக்களை இவர் முன்வைப்பது புதிய விடயமல்ல அண்மையில் அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்ட தருணத்திலும் இவற்றையே வலியுறுத்தினார். வெள்ளைக் கொடி விவகாரத்தினை முன்னிலைப்படுத்தி அமைச்சர் சரத் பொன்சேகா என்னை குற்றவாளியாக சித்தரிக்கவே இவ்வாறான கருத்துக்களை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தெரிவித்து வருகின்றார்.
வெள்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க முன்னர் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையினை நான் அரசிடம் விடுக்கின்றேன் என்றார்.
Why didn't you do it in your time ? All high profile killings
ReplyDeletewere political . For whose benefit ?